மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்!

தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்!

‘இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, “ராமேஸ்வரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் பகுதியைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் சிலர் பாக். ஜலசந்தியில் நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்குவந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் ஏழு பேரைக் கைது செய்து காங்கேசன் துறைமுகத்தில் சிறை வைத்துள்ளனர். அத்துடன் அவர்கள் வைத்திருந்த இரண்டு மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்துக்கு பாக். ஜலசந்தியையே நம்பியுள்ளனர். ஆனால், இலங்கை கடற்படையினர் அவர்களை நிம்மதியாக மீன்பிடிக்க அனுமதிப்பதில்லை. அவர்கள் மீனவர்களைத் துன்புறுத்தி வருவதால், மீனவர்கள் கடும் வேதனையடைந்து வருகின்றனர். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையிலும், மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்க வகைசெய்யவும், 1974இல் இந்தியா - இலங்கை செய்துகொண்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே பலமுறை வலியுறுத்தியுள்ளார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017