மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

ஈரோடு: மஞ்சள் விலை அதிகரிப்பு!

ஈரோடு: மஞ்சள் விலை அதிகரிப்பு!

இந்தியாவில் மிகப்பெரிய மஞ்சள் சந்தையாக விளங்குவது ஈரோடு மஞ்சள் சந்தையாகும். இதனால் ஈரோடு ‘மஞ்சள் மாநகரம்’ என்று அழைக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி ஆகிய பகுதிகளில் மஞ்சள் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மஞ்சள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இம்மஞ்சள் தமிழகம் மட்டுமின்றி ஒரிசா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், மும்பை ஆகிய பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது.

இந்த வாரம் புதன்கிழமை (12.07.2017) ஈரோட்டில் நடந்த மஞ்சள் ஏலத்தில் மஞ்சள் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9,000 ஆக அதிகரித்துள்ளது. ஈரோடு மஞ்சள் வணிகர் சங்கத்தின் விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,500 முதல் ரூ.9,006 வரை விற்பனையானது. வேர் மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,100 முதல் ரூ.7,589 வரை விற்பனையானது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017