மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்திய மாற்றம்!

புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்திய மாற்றம்!

வருடந்தோறும் உலகின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களை அவர்களின் வருடாந்திர வருமானத்தைப் பொறுத்து வரிசைப்படுத்தி Forbes என்ற அமெரிக்க நாளிதழ் வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த வருடத்துக்கான பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி இடம்பெற்றிருந்தார்.

விராட் கோலி இந்த பட்டியலில் ரூ.140 கோடி வருடாந்திர வருமானத்துடன் 89ஆவது இடத்தைப் பிடித்திருந்தார். தற்போது புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதால் பல்வேறு மாற்றங்கள் இந்தப் பட்டியலில் ஏற்பட்டுள்ளது. அதன்படி கடந்த வாரம் பார்சிலோனா அணியில் 2021ஆம் ஆண்டு வரை நீடிக்க மெஸ்சி 340 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் கால்பந்து வீரர்களில் அதிகம் சம்பளம் பெரும் என்ற பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்தப் புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு வாரத்துக்கு ஒரு மில்லியன் சம்பளம் பெறும் ஒரே வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் மெஸ்சி. அவர் மட்டுமின்றி கூடைப்பந்து வீரர்கள் ஸ்டீஃபன் குரி மற்றும் ஜேம்ஸ் ஹார்டென் ஆகியோரும் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டதால் அதிக வருமானம் பெறும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் முன்னேறியுள்ளனர்.

முதலில் Forbes நாளிதழ் வெளியிட்ட பட்டியலுடன், Scroll சேர்ந்து நடத்திய ஆய்வில் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதில் முதலிடத்தில் அதிக வருமானம் ஈட்டும் வீரராக, 97 மில்லியன் டாலருடன் மெஸ்சி உள்ளார். இரண்டாவது இடத்தை 93 மில்லியன் டாலருடன் ரொனால்டோ பெறுகிறார். Forbes அறிவித்த பட்டியலில் 100 நபர்களில் அமெரிக்க கூடைப்பந்து வீரர்கள், பேஸ்பால் வீரர்கள், மற்றும் கால்பந்து வீரர்கள் சுமார் 69 பேர் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல் கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் அணிக்காக விளையாடிவரும் ஸ்டீஃபன் குரி அடுத்த 5 வருடங்களுக்கு 200 மில்லியன் டாலர் சம்பளம் பெறும் ஒப்பந்தந்த்தில் கையெழுத்திட்டார். அவரைப் போன்றே ஜேம்ஸ் ஹார்டென்னும் 228 மில்லியன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதால், இருவரும் கூடைப்பந்து வீரர்களில் அதிக தொகையைச் சம்பளமாகப் பெறும் வீரர்கள் என்ற பெருமையைப் பெற்றுள்ளனர்.

கோல்ப் மற்றும் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர்களுக்குப் பெரும்பாலும் குறைந்த அளவே சம்பளம் வழங்கப்படும் என்பதால் பெரும்பாலானவர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. இடம்பெற்றுள்ள சிலரில் பெடரர் முதலிடத்தில் உள்ளார். விளம்பர தூதுவராக ஃபெடரர் அதிக தொகையை வருமானமாக ஈட்டி வருகிறார் என்பதால் இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளார். ஃபெடரர் Rolex, Nike மற்றும் Credit Suisse போன்ற முன்னணி நிறுவனங்களின் தூதுவராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கோல்ப் வீரரான டைகர் உட்ஸ் ஒரு லட்சம் டாலர்கள் மட்டுமே கடந்த ஆண்டின் வருமானமாக அவர் ஈட்டினாலும், விளம்பர தூதுவராக சுமார் 37 மில்லியன் டாலர் வருமானமாகப் பெற்று இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

இந்த பட்டியலில் இடம் பெற்ற ஒரே பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார் செரீனா வில்லியம்ஸ். அவரது வருடாந்திர வருமானத்திலும் விளம்பர தூதுவராக மூன்றில் இரண்டு பங்கு ஈட்டி வருகிறார். அதேபோல் கடந்த ஆண்டு செரீனா வில்லியம்ஸ் மொத்தமாக 8 மில்லியன் டாலர் பரிசு தொகையாக வென்றுள்ளார். மற்ற டென்னிஸ் வீரர்களான ஃபெடரர், ஜோகோவிச் மற்றும் நடால் போன்றவர்களை ஒப்பிடும்போது குறைவான வருமானம் ஈட்டும் ஒருவராக செரீனா உள்ளார்.

இந்தப் பட்டியலைப் பொறுத்தவரை அனைத்துத் தரப்பு வீரர்களும் இடம்பெற்றிருந்தாலும், பட்டியலில் இடம்பெற்ற ஒரே ஒரு கிரிக்கெட் வீரர் இவர் விராட் கோலி ஆவார். அவர் 3 மில்லியன் டாலர் சம்பளமாகப் பெறுவதனால், உசைன் போல்ட்டினை மிஞ்சியுள்ளார். விராட் கோலி வருடந்தோறும் 22 மில்லியன் டாலர்களுடன் உசைன் போல்ட்டிற்கு (34 மில்லியன் டாலர்) பின்னால் உள்ளார். உசைன் போல்ட் விளம்பர தூதுவராக அதிக வருமானம் ஈட்டி வருகிறார். விராட் கோலியைப் பொறுத்தவரை தற்போதுதான் PUMA நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி தனது புதிய ஒப்பந்தங்களை முன்னர் இருந்த தொகையை விடச் சற்றே அதிகரித்துள்ளார். எனவே, அடுத்த வருடத்துக்கான பட்டியலில் 89ஆவது இடத்தில் உள்ள விராட்கோலி மேலும் முன்னேற வாய்ப்புள்ளது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017