மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

புற்றுநோய் குழந்தைகளுக்கு உதவும் சிறுவன்!

புற்றுநோய் குழந்தைகளுக்கு உதவும் சிறுவன்!

ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவன் இரக்கம் என்ற உந்துதல் சக்தியால்தான் இந்த உலகம் இயங்கி வருகிறது என்பதை உலகத்துக்கு உணர்த்தியுள்ளார்.

நாட்டில் நடக்கும் சம்பவங்கள் மனிதாபிமானமற்றுபோய் காணப்படுவதை உணர்த்தினாலும், ஏதோ ஒரு மூலையில் உதவி செய்யும் மக்கள் தங்களது பணியைச் செய்துகொண்டுதான் இருக்கின்றனர்.

இந்நிலையில், பிலடெல்பியா நகரில் பென்சில்வேனியாவிலிருக்கும் கார்ட்டர் க்ரோக்கெட் என்ற சிறுவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிசெய்து வருகிறார். செயின்ட் ஜூட் குழந்தைகள் ஆராய்ச்சி மருத்துவமனையிலுள்ள புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக 15,000 கிரேயன்ஸ் மற்றும் 1,500 வண்ண புத்தகங்களைச் சேகரித்து வழங்கியுள்ளார். இதில், கவனிக்க வேண்டியது என்னவென்றால், கார்ட்டர் க்ரோக்கெட்டும் ஆட்டிசம் என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்தான்.

இதுகுறித்து கார்ட்டர் க்ரோக்கெட் கூறுகையில், “எனக்கு இருக்கிற ஆட்டிசம் நோயை ஒருபக்கமாக ஒதுக்கி வைத்துவிட்டு, மற்றவர்களுக்கு உதவ நினைக்கிறேன். அவர்களின் இயலாமைமீது கவனம் செலுத்துவதோடு, குழந்தைகளின் தேவைகளை உணர்ந்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். மேலும், சோர்ந்துபோய் இருப்பவர்களின் வாழ்க்கையில் ஒரு வண்ணமயத்தை ஏற்படுத்த, கிரேயன்ஸ் மற்றும் வண்ண புத்தகங்களை வழங்க முடிவு செய்தேன்” என்கிறார்.

இந்தத் தொண்டு செயலுக்கு உள்ளூர் காவல்துறையினரும் செயின்ட் ஜூட் மருத்துவமனை ஊழியர்களும் கார்ட்டர் க்ரோக்கெட்டுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017