மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

ஃபகத் பாசிலின் தமிழ்ப்பற்று!

ஃபகத் பாசிலின் தமிழ்ப்பற்று!

சினிமா உலகில் நடிகை, நடிகர்கள் தன் தாய்மொழி சார்ந்த படங்களுக்கு மட்டும் டப்பிங் பேசி வந்ததோடு, தற்போது பிறமொழி சார்ந்த படங்களுக்கும் டப்பிங் பேசி வருகிறார்கள். ‘பிரேமம்’ சாய் பல்லவி தனது முதல் தெலுங்கு படமான ‘ஃபிடா’வுக்காக டப்பிங் பேசியுள்ளார். அவரைப்போல மலையாள உலகில் முன்னணி நாயகனாக வளர்ந்துவரும் ஃபகத் பாசில், தற்போது சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடித்திருக்கும் ‘வேலைக்காரன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்துக்கு முதன்முறையாக ஃபகத் பாசில் தமிழில் டப்பிங் பேசியுள்ளார்.

இதுகுறித்து நடந்த சமீபத்திய நேர்காணலில் பேசிய இயக்குநர் மோகன் ராஜா, “ஃபகத் பாசில் ஆதி என்ற பெயரில் நெகட்டிவ் எண்ணம்கொண்ட பாசிட்டிவ் கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்துக்காக டப்பிங் பணியில் மிகவும் சரளமாக தமிழ் பேசியிருக்கிறார். வெவ்வேறு கதாபாத்திரங்களைச் சித்தரிக்கக்கூடிய இப்படத்தில் ஃபகத் பாசில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அனிருத் இசையமைத்துவரும் இப்படத்தில், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் மற்றும் ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 24 AM ஸ்டூடியோஸ் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017