மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் சென்சார் அவலம்!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் சென்சார் அவலம்!

ஒன்பது கிரகங்களும் ஒரே இடத்தில் நின்று மிரட்டுவது சினிமா தயாரிப்பாளர்களைத்தான் போலிருக்கிறது. ஏற்கெனவே ஜி.எஸ்.டி., தியேட்டர் கொள்ளை, வீடியோ பைரஸி, கேளிக்கை வரி என்று கிடுகிடுத்துப் போயிருக்கும் இவர்களைத்தான் சென்சார் அமைப்பும் தற்போது மேலும் ஒரு சுமையை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் தமிழ்ப் படங்களுக்கென நேர்ந்துவிடப்பட்டிருக்கும் ஓர் அதிகாரி, என்ன காரணத்தாலோ இவர்களை நையப்புடைப்பதால் கண்ணீர்விட ஆரம்பித்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

முன்பெல்லாம் படத்தை பார்த்தவுடன் இதை நறுக்கு, அதை சுருக்கு என்று டென்ஷன் கொடுத்து வந்தவர், இப்போது இன்னும் வசமாக கசக்குகிறாராம். காரணம் ஆதார். முன்பு போலில்லை, இப்போது. சென்சாருக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், ஆன் லைனில்தான் விண்ணப்பிக்க வேண்டும். அந்த இணைதளமும் சரியான வேகத்தில் இல்லாததால் கூடுதல் தலைவலி. மேலும் அதில் தயாரிப்பாளர்கள் கொடுக்கும் ஆதாரங்களில் முக்கியமானதாக ஆதார் அட்டையும் இருக்க வேண்டும். அப்படி வரும் ஆதார் அட்டைகளில் இருக்கும் போட்டோவைப் பார்க்கும் அதிகாரி, “இந்த படத்திலிருக்கிறது உங்களை மாதிரியில்லே. போய் வேற ஆதார் எடுத்துட்டு வாங்க” என்கிறாராம். (எடுத்தாலும் அடுத்த நாளே கிடைச்சுருமாக்கும்?)

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017