மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

விவசாயத்தின் நிலையும் தேவையான நடவடிக்கையும்!

விவசாயத்தின் நிலையும் தேவையான நடவடிக்கையும்!

ஐ.டி.சி. நிறுவனத்தின் வேளாண் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியாக எஸ்.சிவக்குமார் இருக்கிறார். இவர் விவசாயம் சார்ந்த வளர்ச்சித் திட்டங்களில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார். மேலும் இந்தியாவில் விவசாயத்துறை சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் இவர் பரவலாக பேசியுள்ளார். இவர் ஜி.எஸ்.டி-யால் விவசாயத்துறைக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் பற்றியும், இந்தியாவில் விவசாயத்துறை சந்திக்கும் சவால்கள் குறித்தும் ‘தி இந்து பிஸினஸ் லைன்’ இதழிடம் பேசியுள்ளார்.

அவர் பேசுகையில், “விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு 0% வரி விதித்தது நல்ல நடவடிக்கையாகும். இதனால் நியாயமான முதலீட்டாளர்கள் பயனடைவார்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கும் வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். பல்வேறு பொருள்களுக்கு 4 விதமான வரி விகிதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. அரசாங்கமும் வணிகர்களுக்குச் செவி சாய்க்கிறது. சில பொருள்களுக்கான விகிதங்கள், 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாகப் பருவமழை சரியாகப் பொழியவில்லை. ஆனால், இந்தாண்டு பருவமழை நன்றாகப் பெய்துள்ளது. ஆனால், சில மாநிலங்களில் விவசாயிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டு, விவசாயக்கடன் தள்ளுபடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தரமில்லாத உணவுப் பொருள்களை அதிக விலை கொடுத்து வாங்குவதாக நுகர்வோர் நினைக்கின்றனர். இதுவரை உற்பத்திக்கு ஏற்ப விவசாயம் செய்யப்பட்டது. ஆனால், இனிமேல் தேவைக்கு ஏற்ப விவசாயம் செய்யும் நிலை உருவாகும். இந்த மாற்றத்தை அனைவராலும் புரிந்துகொள்ள முடியாது. அதே நேரத்தில் பருவநிலை மாற்றமும் நமக்குப் பெரிய சவாலாக உள்ளது. பருவநிலை மாற்றத்துக்கும் விவசாயிகள் சந்திக்கும் நெருக்கடிகளுக்கும் நிறையத் தொடர்பு உள்ளது. கோடைக்காலத்தில் அறுவடை செய்யப்பட வேண்டிய பயிர் ஆலங்கட்டி மழையால் பாதிக்கப்படலாம். பருவநிலை மாறுதலை விவசாயிகளாலும் கணிக்க முடியாது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017