மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

முதல்வருக்கு ராஜ மரியாதையா?

முதல்வருக்கு ராஜ மரியாதையா?

‘பொது மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிகளில் ஆடம்பரம் வேண்டாம்’ என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சஹாப் சுக்லா என்ற சி.ஆர்.பி.எஃப். வீரர் தீவிரவாதத் தாக்குதலில் கடந்த ஜூன் 24ஆம் தேதி பலியானார். அவரது மறைவுக்கு ஆறுதல் கூறுவதற்காக கடந்த ஜூலை 8ஆம் தேதி உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அவரது இல்லத்துக்குச் சென்றார். முதல்வரின் வருகையை முன்னிட்டு சஹாப் சுக்லா வீடு அமைந்திருக்கும் தெருவில் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது. அவரது வீட்டில் ஏசி மெஷின் மாட்டப்பட்டு புது சோபாக்கள் போடப்பட்டன.

அவர் வந்துவிட்டு சென்றபின் ஏசி, சோபா போன்றவை எடுத்துச்செல்லப்பட்டன. பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் பலியான பிரேம் சாகர் என்பவரின் இல்லத்துக்கு முதல்வர் சென்றபோதும் இதே ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த ஏற்பாடுகளால் தாங்கள் அவமானப்படுத்தப்பட்டதை போல் உணர்வதாக ராணுவ வீரரின் குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். பல்வேறு தரப்பினரும் இந்தச் சம்பவங்களுக்குக் கண்டனம் தெரிவித்திருந்ததால் சர்ச்சை ஏற்பட்டது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017