மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

பெயின்டிங் பிரஷ்கள் பறிமுதல்!

பெயின்டிங் பிரஷ்கள் பறிமுதல்!

வனத்துறை அலுவலர்களும், வனவிலங்கு வேட்டை குற்றத் தடுப்பு பிரிவு அலுவலர்களும் சேர்ந்து கோவையில் உள்ள பல்வேறு ஸ்டேஷனரி கடைகளில் சோதனை செய்து அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கீரிப்பிள்ளை உரோமத்தால் ஆன பெயின்ட்டிங் பிரஷ்களை ஜூலை 12ஆம் தேதி பறிமுதல் செய்துள்ளனர்.

கோவையைச் சேர்ந்த வனவிலங்கு வேட்டை குற்றத் தடுப்பு பிரிவின் தன்னார்வலர் சந்திரசேகர் ‘தி நியூஸ் மினிட்’டிடம் கூறுகையில், “கோவையில் பல்வேறு ஸ்டேஷனரி கடைகளில் கீரிப்பிள்ளை உரோமத்தால் ஆன பிரஷ்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புதன்கிழமை கோவையில் உள்ள ஒரு மொத்த பெயின்ட்டிங் பிரஷ் விற்பனை கடை மற்றும் ஐந்து சில்லறை விற்பனைக்கடைகளில் சோதனை நடத்தினோம். அவர்கள் கீரிப்பிள்ளை உரோமத்தால் ஆன பெயின்ட்டிங் பிரஷ்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த பிரஷ்கள் பறிமுதல் செய்யப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் பட்டியல் 2 மற்றும் பகுதி 2இன்படி கீரிப்பிள்ளையும் வருகிறது. அதனால், இது சட்டப்படிக் குற்றம் என்பதால் அந்த பிரஷ்களை விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதை அறியாத வாடிக்கையாளர்கள் பலரும் இனிமேல் இந்த வகையான பிரஷ்களை வாங்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். கோவையில் வனவிலங்கு உரோமங்களால் ஆன பிரஷ்களை விற்பனை செய்யும் கடைகள் பற்றிய சோதனை மற்றும் விசாரணை பிரிவில் வனத்துறை அலுவலர்கள், வனவிலங்கு வேட்டை குற்றத்தடுப்பு பிரிவு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர் உள்பட 11 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தக் குழு தமிழ்நாடு மட்டுமில்லாமல், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் இது போன்ற சோதனை மேற்கொள்ளப்பட்டபோது 14,000 பெயின்ட்டிங் பிரஷ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பெயின்ட்டிங் பிரஷ்கள் கீரிப்பிள்ளை உரோமத்தால் செய்யப்பட்டதா என்ற விசாரணைகளும் நடைபெற்று வருகிறது” என்று சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017