மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

என்னை யாரும் எதிர்க்கவில்லை : தினகரன்

என்னை யாரும் எதிர்க்கவில்லை : தினகரன்

கட்சிக்குள் தன்னை யாரும் எதிர்க்கவில்லை என, அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன், அந்நியச் செலாவணி வழக்கில் ஏப்ரல் 15ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 14 ஆம் தேதி தினகரனின் அடையாறு இல்லத்தில் அதிமுக அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக துணை பொதுச்செயலாளராக தினகரன் பதவியில் இருப்பதற்கு அமைச்சர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவிப்பதாக வெளிவந்த தகவலை தினகரன் மறுத்துள்ளார்.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'என்னைப் பதவி விலகச்சொன்ன செய்தி வெறும் வதந்தியாகவே இருக்கும். அதுபற்றிய செய்தி ஏதும் எனக்கு வரவில்லை. நிகழ்வில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தோம். விஜயபாஸ்கர் தன் மீது எந்தத் தவறுமில்லை என்று என்னை சந்தித்து விளக்கமளித்துள்ளார். ஒருவர் வீட்டில் சோதனை நடந்தாலே அவரைப் பதவியிலிருந்து விலகச் சொல்வது எவ்விதத்தில் நியாயம். எத்தனை சோதனை நடந்தாலும் அரசு, அமைச்சர்கள் மீது எந்த தவறும் இருக்கப்போவதில்லை. ஏதோ வாட்சாப்பில் வந்த ஒரு பேப்பரை வைத்துக்கொண்டு ராஜினாமா செய்யுங்கள் என்றால் என்ன அர்த்தம்?. தற்போதைய நிலையில், விஜயபாஸ்கர் அமைச்சர் பதவியிலிருந்து விலகமாட்டார். அமைச்சரவையிலும் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. எனக்கு புத்தாண்டு வாழ்த்துகள் கூறவே அமைச்சர்கள் என் இல்லத்துக்கு வந்தார்கள்.

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

4 நிமிட வாசிப்பு

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

2 நிமிட வாசிப்பு

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

வெள்ளி 14 ஏப் 2017