மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

குஜராத் அணிக்குத் திரும்பிய இரண்டு வீரர்கள்!

குஜராத் அணிக்குத் திரும்பிய இரண்டு வீரர்கள்!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், இன்று இரவு 8 மணிக்கு ராஜ்கோட்டில் நடக்கும் ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் அணியும், ரைசிங் புனே சூப்பர்ஜெயின்ட்ஸ் அணியும் மோதுகின்றன. கடந்த ஆண்டு சிறப்பாக விளையாடி அதிக வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது குஜராத் அணி. ஆனால் இந்தமுறை முதல் இரண்டு ஆட்டத்திலும் தொடர் தோல்வியைச் சந்தித்துள்ளது. ஆல்-ரவுண்டர்களான ஜடேஜா மற்றும் பிராவோ அணியில் இடம்பெறாததே பெரும்பின்னடைவாக அமைந்தது. ஆனால் இன்றைய போட்டியில் ரவீந்திர ஜடேஜா அணிக்குத் திரும்பியுள்ளார் என்பதால் சற்று கூடுதல் பலம் சேர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, மற்றொரு ஆல்-ரவுண்டர் ஜேம்ஸ் பால்குனர் மேலும் பிரன்டன் மெக்கல்லம், ஆரோன் பிஞ்ச், தினேஷ் கார்த்திக், வெய்ன் சுமித், பிரவீன் சயர் போன்ற சிறந்த வீரர்கள் இருப்பதால் இன்றைய போட்டிகளில் குஜராத் அணி வெற்றிபெற முயற்சிக்கும். புனே அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றிபெற்றது. இரண்டில் தோல்வி அடைந்தது. ரகானே, டோனி, பென் ஸ்டோக்ஸ், டு பிளிஸ்சிஸ், இம்ரான் தாகீர் போன்ற சிறந்த வீரர்கள் இருந்தும் இந்த அணியின் தோல்விக்குக் காரணம் சரியான தலைமை என்றே கருத்துகள் வெளியாகியவண்ணம் இருக்கின்றன. கடந்த போட்டியில் விளையாடாத கேப்டன் ஸ்டீவன் சுமித் இன்று விளையாடுவது புனேக்கு சாதகமாக அமையும். தொடர்ந்து 2 ஆட்டத்தில் தோற்றுள்ளதால் இந்தப் போட்டியில் வெற்றிபெற புனே அணி முயற்சிசெய்யும்.

கேரளாவில் மணப்பெண் - உக்ரைனில் மாப்பிள்ளை: ஆன்லைனில் நடந்த திருமணம்! ...

3 நிமிட வாசிப்பு

கேரளாவில் மணப்பெண் - உக்ரைனில் மாப்பிள்ளை: ஆன்லைனில் நடந்த திருமணம்!

காட்டாறு வெள்ளத்தில் சிக்கிய தாய் குழந்தை: பதற வைக்கும் வீடியோ! ...

6 நிமிட வாசிப்பு

காட்டாறு வெள்ளத்தில் சிக்கிய தாய் குழந்தை: பதற வைக்கும் வீடியோ!

கரூர் ஆட்சியரை பாராட்டிய தலைமைச் செயலாளர்!

4 நிமிட வாசிப்பு

கரூர் ஆட்சியரை பாராட்டிய தலைமைச் செயலாளர்!

வெள்ளி 14 ஏப் 2017