மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

பாஜக-வை எதிர்க்கும் பாமக!

பாஜக-வை எதிர்க்கும் பாமக!

‘தமிழகத்தில் பாஜக எப்படியாவது கால் ஊன்றிவிட வேண்டும் என்று பலவழிகளில் பலவிதங்களில் போராடி வருகிறது’ என்று சசிகலா அணியினர் மட்டுமன்றி, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில், பாஜக, பாமக-வை குறிவைத்து ஆள் பிடிக்கும் வேலையில் இறங்கியுள்ளது. சோசியல் மீடியவில் பாமக-வுக்கு ஆதரவாகவும், ஆக்டிவாகவும் செயல்பட்ட நாகை, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களை பிரைன் வாஷ்செய்து இழுத்துள்ளது பாஜக. சத்திரியம், சாம்ராஜியம் என்ற அமைப்பு மூலமாக மன்னர் குடும்பங்களை தேடிப்பிடித்து வருகிறது. காரணம் பாமக-வை அழிக்க வேண்டும் என்ற நோக்கம்தான் பாஜக-வுக்கு.

இதை, அமைதியாக கவனித்து வந்த பாமக நிறுவனர் ராமதாஸ், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தைலாபுரத்தில் வன்னியர் சங்க நிர்வாகிகளை அழைத்து ரகசிய கூட்டம் நடத்தினார், கூட்டத்தில் பங்கேற்றவர்களின் செல்போன்களை வாங்கி வைத்துகொண்டு, செய்திகள் வெளியில் கசியாமல் கூட்டத்தை நடத்தினார். கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசும்போது, “நீங்கள் யாராவது பாஜக, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேருவதுபோல் எண்ணம் இருந்தால் தயவுசெய்து அந்த எண்ணத்தை மாற்றி விடுங்கள். பாஜக-வில் சேருவதைவிட உயிரோடு செத்து போகலாம்” என்று உணர்ச்சிகரமாக பேசியுள்ளார்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களும் உணர்ச்சிகரமாக “பாஜக-வை விரட்டுவதும், எதிர்ப்பதும்தான் நமது வேலை” என்று உறுதியெடுத்துள்ளார்கள்.

கேரளாவில் மணப்பெண் - உக்ரைனில் மாப்பிள்ளை: ஆன்லைனில் நடந்த திருமணம்! ...

3 நிமிட வாசிப்பு

கேரளாவில் மணப்பெண் - உக்ரைனில் மாப்பிள்ளை: ஆன்லைனில் நடந்த திருமணம்!

காட்டாறு வெள்ளத்தில் சிக்கிய தாய் குழந்தை: பதற வைக்கும் வீடியோ! ...

6 நிமிட வாசிப்பு

காட்டாறு வெள்ளத்தில் சிக்கிய தாய் குழந்தை: பதற வைக்கும் வீடியோ!

கரூர் ஆட்சியரை பாராட்டிய தலைமைச் செயலாளர்!

4 நிமிட வாசிப்பு

கரூர் ஆட்சியரை பாராட்டிய தலைமைச் செயலாளர்!

வெள்ளி 14 ஏப் 2017