மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 25 பிப் 2017

காபி ஏற்றுமதி 6% உயர்வு!

காபி ஏற்றுமதி 6% உயர்வு!

நடப்பு 2017ஆம் ஆண்டில் பிப்ரவரி 21 வரையிலான நிலவரப்படி, காபி ஏற்றுமதியில் 6 சதவிகிதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

காபி ஏற்றுமதியில் இந்தியா சர்வதேச அளவில் ஆறாவது இடத்தில் உள்ளது. சுமார் 6 லட்சம் பேர் ஈடுபடும் இத்துறையில் உற்பத்தியாகும் காபியில் 80 சதவிகிதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நடப்பாண்டில் ஜனவரி முதல் பிப்ரவரி 21 வரையிலான காலத்தில் 46,000 டன் காபி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 43,436 டன் காபி ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது. எனவே, காபி ஏற்றுமதி 6 சதவிகிதம் உயர்ந்துள்ளது. மதிப்பீட்டளவில் காபி ஏற்றுமதி ரூ.669 கோடியிலிருந்து ரூ.805 கோடியாக அதிகரித்து 15 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

காபிக்கான சந்தைப் பருவம் நாட்டுக்கு நாடு மாறுபடும். இந்தியாவில் அக்டோபர் முதல் செப்டம்பர் வரை காபி பருவமாகும். சர்வதேச அளவில் அராபிகா, ரோபஸ்டா ஆகிய இரு காபி ரகங்கள் பயிரிடப்படுகின்றன. கடந்த 2016ஆம் ஆண்டில் அராபிகா காபி ஏற்றுமதி 18 சதவிகிதம் வளர்ச்சியுடன் 51,648 டன்னாக உயர்ந்துள்ளது. அதேபோல, ரோபஸ்டா காபி 20 சதவிகிதம் உயர்ந்து 2.01 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

சனி 25 பிப் 2017