மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 அக் 2016

டிஜிட்டல் திண்ணை:‘கருணாநிதியைப் பார்க்க வராதீங்க!’ - திடீர் அறிக்கையின் மெடிக்கல் பின்னணி!

டிஜிட்டல் திண்ணை:‘கருணாநிதியைப் பார்க்க வராதீங்க!’ - திடீர் அறிக்கையின் மெடிக்கல் பின்னணி!

மொபைல் டேட்டா ஆன் செய்தோம். ஆன்லைனில் இருந்த வாட்ஸ் அப், திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையை வாசித்துக் கொண்டிருந்தது. ‘தலைவர் கலைஞர் அவர்களுக்கு கடந்த சில நாட்களாக, வழக்கமாக அவர் உட்கொண்டுவரும் மருந்துகளில் ஒன்று ஒத்துக்கொள்ளாதநிலையில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு, அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வருகிறார்கள். மருத்துவர்கள் மேலும் சில நாட்கள் தலைவர் கலைஞர் அவர்களை ஓய்வெடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள். எனவே, பார்வையாளர்கள் தலைவர் கலைஞர் அவர்களைக் காண வருவதைத் தவிர்த்து, ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்பதுதான் அந்த அறிக்கை.

“என்னாச்சு கருணாநிதிக்கு?”- ஃபேஸ்புக் கேள்வியைத் தொடங்கிவைக்க… வாட்ஸ் அப் பதிலை மெசேஜ் ஆக டைப்பிங் செய்தது.

”அக்டோபர் 13ஆம் தேதி இரவு முதல்வர் ஜெயலலிதாவைப் பார்க்க அப்பல்லோ மருத்துவமனைக்குப் போனார் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள். இதுபற்றி, நாம் 14.10.16 அன்று டிஜிட்டல் தின்ணையில் சொன்ன விஷயங்களை சற்றே ரீவைண்ட் செய்து பார்க்கலாம்.

‘முதல்வர் ஜெயலலிதாவை பார்க்கப் போனவர்களில், இதுவரை யாரும் சசிகலா தங்கியிருக்கும் அறைக்குள் போனது இல்லை. அவரது அறைக்குள் போன முதல் நபர் ராஜாத்தி அம்மாள். சரியாக 40 நிமிடங்கள் இருவரும் பேசியிருக்கிறார்கள். இளவரசி மட்டும் அப்போது உடன் இருந்திருக்கிறார். முதல்வரின் உடல்நிலை பற்றி விசாரித்த ராஜாத்தி அம்மா, ‘எந்த ரூம்ல அம்மா இருக்காங்க..?’ என்றும் கேட்டிருக்கிறார். முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி சசிகலா விலாவாரியாகவே சொன்னாராம். அப்போது ராஜாத்தி அம்மா, ‘அவருக்கும் உடம்புக்கு ரொம்ப முடியலை. தினமும் சீராய்டு ஊசி போட்டுக்கிட்டு இருக்காங்க. இல்லைன்னா அவரே வந்துடுவாரு. நான் போறேன்னு சொல்லிட்டுத்தான் வந்தேன். அவரைப் பத்தி உங்களுக்குத் தெரியாதா?’ என்று சொன்னாராம். அதற்கு சசிகலா, ‘அவரோட உடல்நிலையைப் பார்த்துக்கோங்க…’ என்றும் சொன்னதாகச் சொல்கிறார்கள்.’ என்பதுதான், நாம் அப்போது சொன்ன தகவல். அந்த தகவலைச் சார்ந்த பிரச்னைதான் கருணாநிதிக்கு இன்னும் தொடர்கிறது. அதுதான் இன்று அறிக்கையாக வந்திருக்கிறது. கடந்த 10ஆம் தேதி ‘உடல்நிலை சரியில்லாததால் கடிதம் எழுத முடியவில்லை உடன்பிறப்பே...’ என குறிப்பிட்டு இருந்தார் திமுக தலைவர் கருணாநிதி. கருணாநிதிக்கு சிகிச்சை அளித்துவரும் டாக்டர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம்.”கருணாநிதிக்கு சர்க்கரை வியாதி இல்லை, பி.பி. இல்லை, கொலஸ்ட்ரால் இல்லை. இதுபோன்ற பிரச்னைகள் எதுவும் கருணாநிதிக்கு இல்லை. அதனால்தான் 90 வயதைக் கடந்துவிட்டாலும் இன்னும் உற்சாகமாக வலம்வந்தபடி இருக்கிறார். ஆனால் கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு தோல் நோய் உண்டு. கருணாநிதியின் அக்கா மறைந்த முரசொலி மாறனின் அம்மா சண்முகத்தம்மாளுக்கு கடைசிக் காலத்தில், தோலில் சிறு கொப்புளம் வரும். அது அப்படியே உடைந்து தண்ணீர் வடியும். உடலில் இப்படி பல கொப்புளங்கள் வந்து அவருக்குத் தொல்லை கொடுத்து வந்தது. அதற்கு சண்முகத்தம்மாளுக்கு சில சிகிச்சைகள் கொடுக்கப்பட்டது. கருணாநிதிக்கும் அதேபோல பாதிப்பு மூன்று வருடத்துக்குமுன்பு வந்தது. தீவிர சிகிச்சைக்குப்பின் சரியானது. இப்போது அதுபோன்ற கொப்புளங்கள் அவரது உடலில் ஏற்பட்டுள்ளன.

இந்த நோயைக் குணப்படுத்துவதில் கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த பிரபல டாக்டர் பாத்ரிக் ஏசுடையான்தான் சிறப்பானவர். சீனியர் தோல் நோய் நிபுணர். வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று இந்த சிகிச்சை தொடர்பாக சிறப்புப் படிப்பு படித்தவர். தமிழத்தில் மிகப் பிரபலமான மறைந்த தோல் சிகிச்சை நிபுணர் தம்பையாவின் சிஷ்யர். இவர்தான் கருணாநிதியின் உடலைப் பரிசோதித்து அவருக்கு ஸ்டீராய்டு மருந்துகளைக் கொடுத்து வருகிறார். இந்த மருந்துகளை அதிகளவில் உடலில் செலுத்தினாலும் ஆபத்து. எந்தளவில் அந்த மருந்தைச் செலுத்த வேண்டும் என்பது கருணாநிதியை தொடர்ந்து கவனித்துவரும் டாக்டர் பாத்ரிக் ஏசுடையானுக்கு தெளிவாகத் தெரியும். அதனால் அவர் அதற்கான மருந்துகளைக் கொடுத்து வருகிறார்.’’ என்பதுதான் வாட்ஸ் அப் அனுப்பிய மெசேஜ்.

தொடர்ந்து ஃபேஸ்புக்,”இப்போது எப்படி இருக்கிறார் கருணாநிதி?” என்ற கேள்வியைப் போட்டது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

செவ்வாய் 25 அக் 2016