மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 அக் 2016

உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின்:பகீர் கேள்வி அசராத பதில்!

உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின்:பகீர் கேள்வி அசராத பதில்!

2011ஆம் ஆண்டு கொளத்தூர் தொகுதியில் வென்ற ஸ்டாலினின் வெற்றிக்கு எதிராக, அவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த சைதை துரைசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக நடந்துவருகிற நிலையில், கடந்த 19ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நடந்த விஷயங்களை மின்னம்பலத்தில் விரிவாக எழுதியிருந்தோம், அன்றைய விசாரணையின் முடிவில், வருகிற 25ஆம் தேதி ஆஜராகி நீதிபதியின் முன்னால் வாக்குமூலம் அளிக்குமாறு ஸ்டாலினுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது. அந்தவகையில், இன்று ஆஜரான ஸ்டாலினிடம் அவரது வழக்கறிஞர் கேட்ட கேள்வி-பதில் பின்வருமாறு:

கேள்வி : நீங்கள் இப்போது எந்தப் பதவியில் இருக்கிறீர்கள்?

பதில் : தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

கேள்வி : அதிமுக வேட்பாளர் திரு. சைதை துரைசாமி உங்கள்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில் : மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நான் முழுமையாக மறுக்கிறேன்.

கேள்வி : அரசு ஊழியர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களை தங்கள் தேர்தல் பணிக்கு தவறாகப் பயன்படுத்தியது உண்டா?

பதில் : இம்மனுவில் அரசு இயந்திரத்தையும் – அரசு ஊழியர்களையும் – மாநகராட்சி ஊழியர்களையும் இத்தேர்தலில் எனக்குச் சாதகமாகவும் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும் தவறான ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார் மனுதாரர். இம்மனுவில் கூறப்பட்டுள்ளதுபோல, மாநகராட்சி பணியாளர்களையோ மற்றும் வேறு எந்த அரசு அதிகாரிகளையோ, பணியாளர்களையோ எனது தேர்தல் பணிக்கு, தேர்தல் நன்னடத்தை விதிகளுக்கு முரணாகப் பயன்படுத்தியதில்லை.

கேள்வி : தேர்தல் மனுவில் வாக்காளர்களுக்கு நீங்களும் உங்கள் கட்சிக்காரர்களும் பணப்பட்டுவாடா செய்ததாக கூறியுள்ளதைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்.

பதில்: இம்மனுவில் மனுதாரர், நான், எனது கட்சி நிர்வாகிகள்மூலம் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு பணம் கொடுத்து வெற்றிபெற்றதாக எவ்வித ஆதாரமுமின்றி உள்நோக்கத்துடன் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். அப்படி, எவ்வித சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு அல்லது வாக்காளர்களுக்கு நானோ, என் கட்சி நிர்வாகிகளோ பணம் கொடுத்து வெற்றி பெறவில்லை. தொடர்ந்து இத்தொகுதி மக்களுக்குப் பணியாற்றி நம்பிக்கையைப் பெற்றதன் காரணமாக இரண்டாவது முறையாக சுமார் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிபெறச் செய்துள்ளார்கள் கொளத்தூர் தொகுதி வாக்காளப் பெருமக்கள்.

கேள்வி : 1 கோடியே 18 லட்சம் ரூபாயை தேர்தல் அதிகாரிகளிடம் மனுதாரர் பிடித்துக் கொடுத்ததாகவும் அந்தப் பணம் தாங்கள் தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்குக் கொடுக்க கொண்டுவரப்பட்ட பணம் என்றும் குற்றச்சாட்டு வைத்துள்ளாரே, அதைப்பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?

பதில்: என் மீதும், எனது கட்சி நிர்வாகிகள் மீதும் குறிப்பாகக் கூறப்பட்ட சில குற்றச்சாட்டுகளில் ஒன்றான, பணப் பட்டுவாடா செய்தது குறித்து பல்வேறு புகார்களில் GS-4 என்ற தனியார் நிறுவன வாகனத்தில் பணம் கொண்டுசெல்லும்போது, பிடித்ததாகக் கூறப்பட்டு, அந்தப் பணம் வாக்களர்களுக்கு பணப் பட்டுவாடா செய்திடத்தான் கொண்டுவரப்பட்டதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். நானோ, எனது கட்சி நிர்வாகிகளோ வாக்காளர்களுக்கு எப்போதும் பணப் பட்டுவாடா செய்யும் செயலில் ஈடுபட்டதில்லை.

இதுகுறித்து வருமான வரித் துறையைச் சேர்ந்த அதிகாரி, இந்த மாண்புமிகு நீதிமன்றத்தில் முன்னிலையாகி அளித்த சாட்சியத்தில், உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படியும், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படியும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் முறையாக உரியவருக்கு திரும்ப வழங்கப்பட்டுவிட்டது என்று சாட்சி கூறியுள்ளார். அதனால் மனுதாரரின் இந்தக் குற்றச்சாட்டு முழுமையான பொய் என்பது தெரிகிறது.

கேள்வி: தேர்தல் மனுவில் மனுதாரர் உங்கள் மனைவி திருமதி.துர்கா ஸ்டாலின், குமுதம் சிநேகிதி வார இதழுக்கு கொடுத்த பேட்டியில், தேர்தலுக்கு முன்பாக வாக்காளர்களுக்கு வாக்குக்காக வாக்குறுதி கொடுத்து, வாக்கு சேகரித்தார் என்று வெளிவந்துள்ளதாக மனுதாரர் கூறியிருக்கிறார். அதுபற்றி என்ன கூறுகிறீர்கள்?

பதில்: அந்தப் பேட்டியை படித்தேன். அதில் மனுதாரர் கூறியவாறு, எந்தவிதமான அர்த்தமும் தெரியவில்லை. மனுதாரர் வேண்டுமென்றே தனது மனுவில் அதை திரித்துக் கூறியிருக்கிறார். எனவே, அவரது குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன்.

கேள்வி: திரு.கண்ணையா தலைமையில் இயங்கும் ரயில்வே ஊழியர்கள் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்களைப் பயன்படுத்தி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ததாக மனுதாரர் கூறியிருக்கிறாரே? அதுபற்றி என்ன கூறுகிறீர்கள்?

பதில்: தேர்தலின்போது, பல்வேறு அமைப்புகள் திமுக-வுக்கு ஆதரவு அளித்தன. அதுபோல, திரு.கண்ணையா அவர்களின் தலைமையில் இயங்கும் சங்கமும், எனக்கு ஆதரவு தெரிவித்து, தேர்தல் பிரச்சாரத்தில் மட்டுமே அவர்கள் ஈடுபட்டார்களே தவிர, மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளபடி, பணப் பட்டுவாடா எதுவும் செய்யவில்லை. எனவே, மனுதாரரின் குற்றச்சாட்டை முற்றிலும் மறுக்கிறேன்.

கேள்வி: மனுதாரர் தாக்கல் செய்துள்ள சான்றாவணம் 50 மற்றும் 51 ஆகியவற்றில் அடங்கிய புகைப்படங்கள் மற்றும் குறுந்தகடுகளை நீங்கள் பார்த்தீர்களா ? நீங்களும், உங்கள் கட்சிக்காரரும் செய்துள்ள தேர்தல் விதிமீறல்கள் அவற்றில் புலப்படுகின்றன என்று மனுதாரர் கூறியுள்ளாரே. அது பற்றி என்ன கூறுகிறார்கள்?

பதில் : அந்தப் புகைப்படங்களிலும், குறுந்தகடுகளிலும் உள்ள காட்சிகளைப் பார்க்கும்போது, அவை பல்வேறு நிகழ்ச்சிகள், பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்பாகத்தான் தெரிகிறதே தவிர, 2011ஆம் ஆண்டு கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற என்னுடைய பிரச்சாரம் சம்பந்தமாக இந்த வழக்குகளில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கும் தொடர்பு இருப்பதாகவே தெரியவில்லை. மேலும் அவற்றை பார்க்கும்போது நானோ, எனது கட்சிக்காரர்களோ எந்தவித தேர்தல் விதிமீறல்கள் செய்ததாகவும் தெரியவில்லை. ஆகவே, மனுதாரரின் குற்றச்சாட்டை நான் முழுவதுமாக மறுக்கிறேன். இன்னும் சொல்லப்போனால், வேறு கட்சிகளின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களின் பதிவுகள்கூட அவற்றில் உள்ளன.

கேள்வி: மனுதாரருக்கு எதிராக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குமுதா என்ற ஒருவரைப் பயன்படுத்தி, மனுதாரருக்கு எதிராக புகார் கொடுப்பதற்கும், அந்தப் புகாரை மனுதாரருக்கு எதிராக அவதூறானவகையில் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் செய்தி வந்ததற்கும் நீங்கள்தான் பின்னணியில் இருந்ததாக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளாரே? அதற்கு தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?

பதில்: மனுதாரர் கூறும் குற்றச்சாட்டை நான் முற்றிலுமாக மறுக்கிறேன்.தேர்தல் சமயத்தில் மனுதாரருக்கு எதிராக வழக்கு நடைபெற்று ஆணையிடப்பட்டதால் அதை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டிருக்கலாம். ஆனால் இதில் எனக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. ஏனெனில், நீதிமன்ற ஆணைகளையும், அது சம்பந்தமான வழக்கு விவரங்களையும் ஊடகங்கள் வழக்கமாக செய்திகள் வெளியிடும். ஆகவே, மனுதாரரின் குற்றச்சாட்டில் துளியும் உண்மை இல்லை.

கேள்வி: உங்களது கட்சியினர் பல இடங்களில் கூட்டங்கள் நடத்தி அங்கு செயல்படும் சங்கங்களின் நிர்வாகிகளை வரவழைத்து அவர்கள் மூலமாக வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளதைப் பற்றி என்ன கூறுகிறீர்கள் ?

பதில்: இதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். அதுபோன்ற கூட்டங்களை நடத்தி, யாருக்கும் பணம் பட்டுவாடா செய்யவில்லை. இது உண்மைக்கு மாறான குற்றச்சாட்டு.

கேள்வி: மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 77இன் படி, தேர்தல் செலவுக்கென நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பைத் தாண்டி சுமார் 3௦ கோடி ரூபாய் நீங்களும் உங்கள் கட்சியினரும் செலவு செய்துள்ளீர்கள் எனக் குற்றம்சாட்டியுள்ளாரே. அதற்கு என்ன சொல்கிறீர்கள்?

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

செவ்வாய் 25 அக் 2016