மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 அக் 2016

பாராட்டும் திருமா!

பாராட்டும் திருமா!

திருமாவளவன் கலந்துகொள்வதாக முடிவெடுத்து மக்கள் நலக் கூட்டணி தலைவர்களின் நிர்பந்தத்தால் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்தநிலையில், திமுக அழைப்புவிடுத்த அனைத்துக் கட்சி கூட்டத்தின் முடிவுகளை வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக பேசிய திருமா, “திமுக-வின் முன்முயற்சியில் நடைபெற்ற இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், உடனடியாக சிறப்பு சட்டசபை கூட்டம் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறது. சிறப்பு சட்டசபை கூட்டுவதும், பிரதமரைச் சந்தித்து மேலாண்மை வாரியம் அமைப்பதை வலியுறுத்துவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு உடன்பாடான கருத்துகள் ஆகும். டெல்டா மாவட்டங்களைப் பொறுத்தவரையில், குறுவை மற்றும் சம்பா சாகுபடி இல்லாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு கோரியிருப்பதையும் விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறது. திமுக அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டியதையும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறது என்றபோதிலும் விசிக-வானது, மக்கள் நலக் கூட்டணியில் இருப்பதால், தோழமைக் கட்சிகளின் பெரும்பான்மை கருத்துகளை கருத்தில் கொண்டு இதில் பங்கேற்கவில்லை என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளேன். அரசியல் பாகுபாடுகள் இன்றி, மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு நடத்தப்பட்டிருக்கும் இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தையும், அதில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களையும் விடுதலைச் சிறுத்தைகள் முழு மனதாக ஆதரிக்கிறது. இருந்தபோதிலும், நாங்கள் மக்கள் நலக் கூட்டணியின் ஒரு அங்கமாக இயங்கிக் கொண்டிருக்கிறோம். அக்டோபர் 6ஆம் தேதி விவசாய சங்கங்களின் ஆலோசனையோடு எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் இந்தக் கூட்டமானது கூட்டப்பட்டிருந்தால் மக்கள் நலக் கூட்டணியால் இதை புறந்தள்ளியிருக்க முடியாது. எனவே, விவசாய சங்கங்களை முன்னிருத்தி இந்தக் கூட்டத்தை கூட்டியிருந்தால் இது, இன்னும் வெற்றிகரமாக அமைந்திருக்கும் என்பது என் கருத்து. மேலும் இப்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானங்களை அதிமுக அரசு நிறைவேற்றும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த விஷயத்தைப் பொருத்தவரை வேறு எந்தக் கட்சிகளும் இதில் உரிமைகோரிவிடவோ, பயன்பெற்றுவிடவோ கூடாது என்று அதிமுக நினைக்கிறது. ஏனென்றால், கடந்த ஐந்து ஆண்டுகளிலும், இப்போதும், அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று எவ்வளவோ வலியுறுத்தியும் அது செவிமடுப்பதாக இல்லை. எனவே, தற்போது திமுக அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி நிறைவேற்றியிருக்கும் தீர்மானங்களை அதிமுக செயல்படுத்தும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை” என்று கூறியிருக்கிறார் திருமா.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

செவ்வாய் 25 அக் 2016