மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 அக் 2016

தேய்ந்துகொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி!

தேய்ந்துகொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி!

பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையில் நடந்துவரும் டெஸ்ட் தொடர் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, முதல் டெஸ்ட் போட்டியில் வென்றிருந்த பாகிஸ்தான் அணி இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் யூனிஸ்கான் 127, மிஸ்பா உல் ஹக் 96 என மூத்த வீரர்களின் அபார ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 452 ரன்கள் குவித்தது.

பின்னர், முதல் இன்னிங்சைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 224 ரன்னில் சுருண்டது. இதனால் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 228 ரன்கள் முன்னிலை பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணியை ஃபாலோ ஆன் செய்யப் பணிக்கும் என எதிர்பார்த்தநிலையில், பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. முதல் இன்னிங்ஸ்போலவே சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் 2 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸின் முன்னிலையும் சேர்த்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 456 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

கடின இலக்கைத் துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிளாக்வுட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 95 ரன்கள் எடுத்த நிலையிலும் மற்ற வீரர்கள் பெரியளவில் ஜொலிக்காததால் 322 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தது. இதனால் பாகிஸ்தான் 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹோப் 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றி தொடரில் முன்னிலை வகிக்கிறது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

செவ்வாய் 25 அக் 2016