மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 அக் 2016

சிவகாசி பட்டாசு விபத்து – நீதிமன்றம் சரவெடி!

சிவகாசி பட்டாசு விபத்து – நீதிமன்றம் சரவெடி!

சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் நாகமுத்து, முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் இன்று, சிவகாசி பட்டாசு விபத்துக் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மத்திய, மாநில அரசு அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். நீதிபதிகள், ஒரே கட்டடத்தில் பட்டாசுக் கடைக்கும் ஸ்கேன் நிலையத்துக்கும் அனுமதி கொடுத்தது ஏன்? என்று, பட்டாசுக் கடைக்கு அனுமதி கொடுத்த வருவாய்த்துறை அதிகாரியிடம் கேள்வியெழுப்பினர். மேலும் வெடிமருந்து கட்டுப்பாட்டு அதிகாரி ஏன் ஆய்வு மேற்கொள்ளவில்லை? என சரமாரியாக பல கேள்விகளைக் கேட்டனர்.

இதற்கு அரசு சார்பில் விளக்கமளித்த அதிகாரி கரூர், திருச்சியில் பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி கொடுத்ததில் விதிமீறல்கள் நடைபெற்றுள்ளதாகக் கூறினார். இதையடுத்து, விதிமீறல்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளதாகவும் அந்த அதிகாரி நீதிபதிகளிடம் தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதிகள், பட்டாசுக் கடை விதிமீறல் தொடர்பாக கரூர் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை அளிக்கவேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும் நான்கு நாட்களுக்குமுன்பு, சிவகாசியில் நடந்த வெடிவிபத்து குறித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலரை அழைத்து விசாரித்தது.

பட்டாசு ஆலை பாதுகாப்பான முறையில் செயல்பட்டதா? ஸ்கேன் சென்டர் அருகில் பட்டாசு ஆலையை வைக்க உரிமம் கொடுத்தது ஏன்? சிவகாசி மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைப் பிரிவு உள்ளதா? என, பல கேள்விகளை எழுப்பியது. மேலும் சுற்றிலும் குடியிருப்பு உள்ள பகுதியில் பட்டாசுத் தொழிற்சாலை அமைக்க அனுமதியளித்தது ஏன்? என்றும் வினவியுள்ளது. மேலும் தீபாவளிப் பண்டிகை விரைவில் வரவிருக்கும்நிலையில், பல இடங்களில் பட்டாசுக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், உரிமம் இல்லாமலும் பாதுகாப்பற்றநிலையிலும் செயல்பட்டு வரும் பட்டாசுக் கடைகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள பட்டாசுக் கடைகளில் அதிகாரிகள் சோதனையிட்டனர்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

செவ்வாய் 25 அக் 2016