மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 அக் 2016

தீம் பார்க் விபத்து - 4 பேர் பலி!

தீம் பார்க் விபத்து - 4 பேர் பலி!

விடுமுறை என்றாலே குழந்தைகள் செல்ல விரும்புமிடம் தீம் பார்க் என்னும் பொழுதுபோக்கு பூங்காவுக்குத்தான். ஆனால் தற்போது தீம் பார்க்குக்குச் செல்ல அஞ்சும்வகையில் விபத்துகள் அதிகரித்து அவை பாதுகாப்பற்றதாக உள்ளன.

ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்தில் உள்ள ’கோல்ட் கோஸ்ட்’ தீம் பார்க் மிகவும் பிரபலமானது. இதில், 40க்கும் மேற்பட்ட சவாரிகள் மற்றும் இடங்கள் உள்ளன. இந்நிலையில், இன்று மதியம் 2 மணியளவில் ’கோல்ட் கோஸ்ட்’ தீம் பார்க்கில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2 பேர் காயமடைந்துள்ளார்.

ஆற்றுநீரில் பாறைகளால் உருவாக்கப்பட்டுள்ள செயற்கைக் குகைகள் மற்றும் மரப்பாலங்களைக் கடந்து ஆறுபேர் அமர்ந்துசெல்லும் பரிசல் சவாரிதான் ’தன்டர் ரிவர் ரேபிட் சவாரி’. இந்தச் சவாரியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என மொத்தம் 4 பேர் இறந்ததாகவும் இந்தச் சம்பவம் கன்வேயர் பெல்ட் சம்பந்தப்பட்டது எனவும் குயின்ஸ்லாந்து போலீஸார் அறிக்கையில் உறுதிசெய்துள்ளனர். இந்த விபத்துக் குறித்து தகவலறிந்து மீட்புப்படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் எப்படி நிகழ்ந்ததென்று தெரியவில்லை. சம்பவம் குறித்த உண்மைகளைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கோல்ட் கோஸ்ட் நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, ’ட்ரீம் வேர்ல்ட்’ தீம் பார்க் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்தத் தகவலறிந்த அமெரிக்க ஒலிம்பிக் சாம்பியன் மேத்யூ, தனது ட்விட்டர் பக்கத்தில், ’இந்தச் சம்பவம் எனக்கு அதிர்ச்சியளிக்கிறது 15 நிமிடத்துக்கு முன்புதான், அந்த ரோலர் கோஸ்டரில் ஏறி சந்தோஷமாகச் சுற்றினேன். அந்த சந்தோஷ தாகம் அடங்குவதற்குள் இப்படி ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது வேதனையளிக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

செவ்வாய் 25 அக் 2016