மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 அக் 2016

கேரளக் கழிவுகள் கோவையில் கொட்டப்படுகிறதா?

கேரளக் கழிவுகள் கோவையில் கொட்டப்படுகிறதா?

தமிழகத்தில் சுகாதார சீர்கேட்டால் அதிகமான நோய்கள் பரவி வருகிறது. இந்நிலையில், கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுப் பொருட்களை கோவையருகே கொட்ட வந்த 24 லாரிகள் சிறை வைக்கப்பட்டுள்ளன.

கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து மருத்துவக் கழிவுகள், ஆயில் டப்பாக்கள், பீங்கான் பாகங்கள் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை தமிழகத்தின் எல்லைப் பகுதியான கோவை பகுதியில் கொட்டி வருகின்றனர்.

கோவை மாவட்டம், எட்டிமடை அருகேயுள்ள நெல்லிக்காடு தோட்டத்தில் கொட்டப்பட்டிருந்த கழிவுப் பொருட்களால் அப்பகுதியில் தூர்நாற்றம் வீச ஆரம்பித்தது. இதையடுத்து, மக்கள் அந்த இடத்துக்குச் சென்று பார்த்தபோது கழிவுப் பொருட்கள் மலைபோல் குவிக்கப்பட்டிருந்தன. மேலும் கழிவுப் பொருட்களைக் கொட்ட 24 லாரிகள் காத்துக் கொண்டிருந்ததைப் பார்த்த மக்கள், லாரிகளை சிறைப்பிடித்தனர். இதுகுறித்து கே.ஜி. சாவடி போலீசார் மற்றும் எட்டிமடை பஞ்சாயத்து அலுவலர் வளர்மதி ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து அவர்கள் உடனடியாக விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இந்தக் கழிவுகள் அனைத்தும் செல்லப்ப கவுண்டர் (75) என்பவருக்கு உரிமையான தோட்டத்தில் கொட்டப்பட்டுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்தது. ஆனால் அந்த தோட்டத்தை கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த முகமது இலியாஸ் (50) என்பவருக்கு குத்தகைக்கு விட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இங்கு கொட்டப்படுகிற கழிவுப் பொருட்களை, தரம் பிரித்து விற்பனை செய்து வருவதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, தோட்டத்தின் உரிமையாளர் செல்லப்ப கவுண்டர், முகமது இலியாஸ் ஆகிய இருவரையும் போலீஸார் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியதற்காக கைது செய்தனர். அதையடுத்து, கழிவுகளை கொட்டவந்த 24 லாரிகளையும் சிறைப்பிடித்தனர்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

செவ்வாய் 25 அக் 2016