மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 அக் 2016

கவலை வேண்டாம்! - நம்பிக்கையுடன் ரத்தன் டாடா!

கவலை வேண்டாம்! - நம்பிக்கையுடன் ரத்தன் டாடா!

இந்தியாவின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனமான டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து சிரஸ் மிஸ்ட்ரி அதிரடியாக நேற்று நீக்கப்பட்டார். இதையடுத்து, அந்தப் பதவிக்கு தற்காலிகத் தலைவராக ரத்தன் டாடா பதவியேற்றுக்கொண்டார். டாடா குழுமத்தின் இந்த அறிவிப்பையடுத்து இந்தியா உள்பட உலகளவில் உள்ள தொழில்துறை நிறுவனங்களிடம் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்காலிக தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள ரத்தன் டாடா தனது குழுமத்தின் கிளை நிறுவனங்களின் சி.இ.ஓ. அனைவரும் கலந்துகொள்ளுமாறு ஆலோசனைக் கூட்டத்தை இன்று கூட்டினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டாடா மோட்டார்ஸ், டாடா கம்யூனிகேஷன் உள்பட அனைத்து டாடா குழுமத்தின் சி.இ.ஓ-க்களும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய ரத்தன் டாடா, தலைவர் பொறுப்பிலிருந்து சிரஸ் நீக்கப்பட்டது குறித்து கவலைப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

செவ்வாய் 25 அக் 2016