மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 அக் 2016

நிலக்கரி இறக்குமதி! நிறுத்தும் தமிழக மின் வாரியம்!

நிலக்கரி இறக்குமதி! நிறுத்தும் தமிழக மின் வாரியம்!

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதை நிறுத்தியதுபோல, நிலக்கரி இறக்குமதியையும் நிறுத்தவும் தமிழ்நாடு மின் வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழக மின் வாரியத்துக்கு 4,660 மெகாவாட் திறனுடைய ஆறு அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் ஆண்டுக்கு, 2.75 கோடி டன் நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. இதில், 2.35 கோடி டன் பொதுத்துறையைச் சேர்ந்த ‘கோல் இந்தியா’ நிறுவனத்தின் ஒடிசா, மேற்குவங்க மாநிலச் சுரங்கங்களில் இருந்து பெறப்படுகிறது.

மீதியை, தனியார் நிறுவனங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து மின் வாரியம் இறக்குமதி செய்கிறது. இறக்குமதி செய்யும்போது, சர்வதேச சந்தையில் ஒரு டன் நிலக்கரி ரூ.4,000-க்கு கிடைத்தபோதும், மின் வாரியம் ரூ.5,400-க்கு வாங்கியது. இதனால், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, 2015 முதல் சந்தை விலைக்கு நிலக்கரி வாங்க மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். தற்போது, ஒரு டன் ரூ.3,700-க்கு வாங்கப்படுகிறது. இந்நிலையில், வெளிநாடுகளின் நிலக்கரி இறக்குமதியை நிறுத்தி கோல் இந்தியாவின் சுரங்கங்களில் இருந்து மட்டும் வாங்க மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

செவ்வாய் 25 அக் 2016