மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 அக் 2016

சிரஸ் மிஸ்ட்ரி ஏன் நீக்கப்பட்டார்?

சிரஸ் மிஸ்ட்ரி ஏன் நீக்கப்பட்டார்?

இந்தியாவின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்த சிரஸ் மிஸ்ட்ரி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ரத்தன் டாடா தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். டாடா சன்ஸ் குழுமத்தின் மொத்த பங்குகளில் 18 சதவிகித பங்குகள் சிரஸ் மிஸ்ட்ரியின் தந்தையான ஷபூர்ஜி பலோன்ஜி குழுமத்திடம் உள்ளது. இந்நிலையில் டாடா சான்ஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து சிரஸ் நீக்கப்பட்டது தொழில்துறை வட்டாரங்களிடையே அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டாடா குழுமத்தின் நீண்ட தேடலுக்குப் பிறகு டாடா சன்ஸின் தலைவராக சிரஸ் மிஸ்ட்ரி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து தலைவராக பொறுப்பேற்று கொண்ட சிரஸ் மிஸ்ட்ரி அடுத்து வந்த காலகட்டத்தில் சில முக்கிய முடிவுகளை மேற்கொண்டார்.

சிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இவர் தன்னிச்சையாக எடுத்த பல்வேறு முடிவுகள் டாடா குழுமத்துக்குச் சொந்தமான பல்வேறு நிறுவனங்களின் சரிவுக்குக் காரணமாக மாறியுள்ளது. டாடா குழுமத்தின் ஓர் அங்கமான டாடா ஸ்டீல் மற்றும் டாடா டெலிகாம் சர்வீஸ் கடுமையான நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. இதையடுத்து ஐரோப்பிய யூனியனில் இருந்த டாடா ஸ்டீல் நிறுவனத்தை விற்க வேண்டிய சூழ்நிலைக்கு சிரஸ் தள்ளப்பட்டார். அடுத்ததாக சீனாவில் டாடா கார்களின் தேவை குறைந்ததால் டாடாவின் அதிக விலை பிரிவு கார்களான ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் ஆகியவற்றின் விற்பனை சரிந்தது. முன்னதாக சீனாவில் டாடா மோட்டார்ஸின் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் கார்கள் முதலிடத்தில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

செவ்வாய் 25 அக் 2016