மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 அக் 2016

சிமெண்ட் உற்பத்திக்கு ரூ.8,500 கோடி முதலீடு!

சிமெண்ட் உற்பத்திக்கு ரூ.8,500 கோடி முதலீடு!

இமாமி நிறுவனம் சிமெண்ட் உற்பத்திக்காக சுமார் ரூ.8,500 கோடி முதலீடு செய்வதாக தெரிவித்துள்ளது. வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் (FMCG) விற்பனை நிறுவனமான இமாமி சமீபத்தில் சிமெண்ட் துறையில் களமிறங்கியது. எனவே, சிமெண்ட் தயாரிப்பு மற்றும் அரவை ஆலைகளை அமைக்க இமாமி முடிவு செய்துள்ளது. இதற்காக சத்தீஷ்கர் மாநிலத்தை தேர்வு செய்துள்ள இமாமி, அங்கு ஆண்டுக்கு 5.5 மில்லியன் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யும் புதிய ஆலை ஒன்றை அமைக்கிறது. இதற்காக ரூ.3,500 கோடி செலவிடுகிறது.

இதுதவிர, ஒடிசாவில் ஆண்டுக்கு 1.5 மில்லியன் டன் அளவிலான சுண்ணாம்பு அரவை செய்யும் ஆலை ஒன்றையும், மேற்கு வங்கத்தில் 2 மில்லியன் டன் அளவிலான சுண்ணாம்பு அரவை ஆலை ஒன்றையும் அமைக்க இமாமி முடிவு செய்துள்ளது. இந்த இரண்டு அரவை ஆலைகளும் அடுத்த ஆண்டின் ஜனவரி மாதம் தொடங்கப்படுகிறது. அதேபோல, சத்தீஷ்கரில் நிறுவப்படும் உற்பத்தி ஆலை 2018ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்படும் என்று இமாமி குழுமத்தின் இயக்குநர் ஆதித்யா அகர்வால் தெரிவித்துள்ளார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

செவ்வாய் 25 அக் 2016