மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 அக் 2016

இரண்டாவது பாதியை வென்ற கேரளா!

இரண்டாவது பாதியை வென்ற கேரளா!

பரோடாவில் நேற்றிரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கோவா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கேரளா அணி தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. இந்தாண்டின் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் நான்கு புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடம் வகிக்கும் கோவா அணி உள்ளூர் ஆரவாரத்துடன் வெற்றியைப் பதிவு செய்யும் நோக்கில் விரைவாக செயல்பட்டனர். ரசிகர்கள் கொடுத்த எனர்ஜியில் விறுவிறுவென பலமுறை கோல் போஸ்ட்டை நோக்கி கோவா வீரர்கள் பாய்ந்தனர். கேரளா அணியின் நடுகள வீரர் ரிச்சர்விசன் கேரளா வீரர்களை அருமையாக ஏமாற்றினார் என்றுதான் சொல்ல வேண்டும். தன்னிடம் வந்த பந்தை கேரளா தடுப்பாட்டக்காரர்கள் ஹெங்கர்ட் மற்றும் ஹீகஸ் ஆகிய இரண்டு பேர் சுற்றி வளைத்தும் தன் காலில் மேஜிக் வைத்திருப்பதுபோல் செயல்பட்டு, சக வீரர் ஜூலியா சிஸரிடம் அசிஸ்ட் செய்தார். தனக்கு கிடைத்த சிறப்பான பாஸை பயன்படுத்தி 24ஆவது நிமிடத்தில் அருமையாக கோலுக்குள் திருப்ப, அரங்கமே அதிர்ந்தது. இதனால், கோவா அணியினர் உற்சாகத்துடன் செயல்பட முதல் பாதியில் கேரளாவால் கோல் போட இயலவில்லை, கோவா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதி தொடங்கியது. 24 நொடிகளே ஆனது. அரங்கமே அதிர்ந்துகொண்டிருந்த நிலையில் கேரளா வீரர் முகமது ரபி கோல் அடிக்க கப்சிப் என அமைதி அடைந்தது கோவா. முகமது ரபீக் வலதுபுறத்தில் இருந்து கடத்தி கொடுத்த பந்தை சக வீரர் முகமது ரபி அருமையாக கோலாக்கினார். இரண்டாம் பாதியின் தொடக்கத்திலே 1-1 என சமநிலையை எட்டியதால் போட்டி விறுவிறுப்பான நிலையை எட்டியது. ஆட்டம் முடிய 6 நிமிடங்களே இருந்தது. இரு அணிகள் கோல் அடிக்கும் முயற்சியும் தடுக்கப்பட்டவாறே இருந்தது. சற்றும் எதிர்பார்க்காமல் போட்டி சமமானதால், கோவா வீரர்கள் எரிச்சல் அடைந்தது மட்டுமின்றி கேரளா வீரர்களை சீண்டுவதில் நேரம் செலவிட்டனர். ஆனால், 84ஆவது நிமிடத்தில் கேரள அணி வீரர் பெல்போர்ட், கோவாவின் பின்கள வீரர்களை லாவகமாக ஏமாற்றி கோல் அடித்து கோவாவுக்கு அதிர்ச்சி அளித்தார். இதனால், ஆரவாரத்துடன் தொடங்கிய போட்டியானது அமைதி சூழ முடிவு பெற்றது. முடிவில் கேரள அணி 2-1 என்ற கோல் கணக்கில் கோவாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து, இரண்டாவது வெற்றியை பெற்றது. ஆறாவது ஆட்டத்தில் ஆடிய கோவா அணி சந்தித்த நான்காவது தோல்வி இதுவாகும்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

செவ்வாய் 25 அக் 2016