மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 அக் 2016

இந்த இயக்குநருக்கு ரசிகர்கள் அதிகம்!

இந்த இயக்குநருக்கு ரசிகர்கள் அதிகம்!

இந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வசூல் சாதனை செய்த ஹாலிவுட் படங்களின் வரிசையில் முக்கிய இடம் வகிக்கும் படம் ‘Deadpool’. மார்வெல் பட வரிசைகளில் இந்தப் படமும் மெகா ஹிட். இதன் மூலமாக, இயக்குநராக தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் டிம் மில்லர். இப்படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கவிருந்த நிலையில், நடிகர் ரெயன் ரெனால்டுக்கும், இயக்குநர் டிம் மில்லருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் டிம் மில்லர் இப்படத்தில் இருந்து விலகிக்கொண்டார். இதனை யார் இயக்குவது என ‘Deadpool’ ரசிகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. Change.org petition என்ற தளத்தின் மூலமாக ரசிகர்கள் தங்கள் கருத்தினை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் பெரும்பான்மையான ரசிகர்களின் தேர்வாக இருப்பவர், குய்ண்டின் டொரண்டினோ. ‘கில்புல்’ சீரிஸ் மற்றும் பல வெற்றி படங்களின் மூலம் பிரபலமானவர். ஆனால், இதற்கு டொரண்டினோ ஒப்புக்கொள்வாரா என்பது தெரியவில்லை. எனினும், அவர் இயக்கினால் இந்த படம் சிறப்பாக இருக்கும் என்பதே பலரது கருத்தாக உள்ளது. இதுகுறித்த மேற்படி தகவல்களுக்காக காத்திருப்போம். 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் ‘Deadpool2' திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்குள் இயக்குநரை முடிவு செய்து படத்தை முடித்து விடுவார்கள் என்று நம்பலாம்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

செவ்வாய் 25 அக் 2016