மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 அக் 2016

மாவோயிஸ்டுகள் தலைவர் தப்பினார்!

மாவோயிஸ்டுகள் தலைவர் தப்பினார்!

ஒடிஸா - ஆந்திரா எல்லையோர மலைவாழ் கிராமத்தில் 24 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், மாவோயிஸ்டு எதிர்ப்பு படையின் மிக முக்கியமான முன்னேற்றமாகவும் கருதப்படுகிறது. ஆந்திரா தொடங்கி மேற்கு வங்கம் வரை நீளமாக பரந்து விரிந்திருக்கும் மத்திய இந்தியாவின் காடுகளில் மாவோயிஸ்டுகள் ஆயுதமேந்திய போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இதனை சிகப்பு தாழ்வாரம் என்று இந்திய ஊடகங்களும், அரசும் வர்ணிக்கின்றன. வசந்தத்தின் இடி முழக்கம் என்று சாருமஜூம்தார் தலைமையில் நக்சல்பரி கிராமத்தில் தொடங்கிய மாவோயிஸ்ட் போராட்டம் பல பிளவுகளையும், சிதைவுகளையும் சந்தித்தபோதிலும் இன்று வரை உயிர்ப்போடு இருக்கிறது. ஆந்திராவில் பலம் பொருந்திய கெரில்லாக்களாக இருந்த நக்சலைட்டுகளை கோப்ரா ஆக்‌ஷன், கிரேகவுண்ட் என பல பெயர் கொண்ட ஆழ ஊடுருவும் அதிரடிப்படைகள் வேட்டையான ஆந்திராவில் பலமிழந்தவர்கள் ஒடிஸா, ஆந்திரா எல்லையோரம் தொடங்கி சத்தீஷ்கர் வரை பரந்து விட்டார்கள். காடுகளில் வாழும் பழங்குடிகள்தான் அவர்கள் அஸ்திவாரம் என்ற போதிலும் அவர்களுடைய தற்போதைய தாக்குதல் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

என்ன நடந்தது?

காடுகளில் வாழும் மாவோயிஸ்டுகள் அமைப்பை பலப்படுத்த அடிக்கடி மக்களோடும் தங்களின் கட்சி உறுப்பினர்களோடும் கூட்டங்களை நடத்துவார்கள். அப்படி கூட்டங்களுக்கு மாவோயிஸ்டு அமைப்புகளின் மொத்த தலைவர்களும் ஒன்றாகச் செல்வதில்லை. ஒரு தலைவர் சென்றால் அவருக்குப் பாதுகாப்பாக ஆறு நன்கு பயிற்சி பெற்ற கெரில்லா போராளிகள் தலைவர்களுடன் செல்வார்கள். துரிதமாகச் செயல்படுவது, ராணுவத்தினரை வீழ்த்தி ஆயுதங்களைக் கைப்பற்றுவது, ஆபத்து காலத்தில் அதிரடியாகச் செயல்பட்டு, தங்கள் தலைவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பது போன்ற நடவடிக்கைகளில் இவர்கள் வல்லவர்கள். அப்படித்தான் இதற்கு முன்னர் 2008 மாவோயிஸ்டுகள் ரகசியமாகக் கூடுகிறார்கள் என்ற தகவல் கிடைக்க அதிரடியாக நுழைந்த படையினர் தாக்கியதில் 28 மாவோயிஸ்டுகள் பலியானார்கள். அதன் பின்னர் பதிலுக்கு மாவோயிஸ்டுகள் எத்தனையோ தாக்குதல்களை நடத்தியபோதிலும் அவர்களால் மிகப்பெரிய தாக்குதல் எதனையும் நடத்த முடியவில்லை. அதன் பிறகு இப்போதுதான் ஒடிசா, ஆந்திரா எல்லையோர வனப்பகுதியான மல்கங்ரியில் மாவோயிஸ்டு தலைவரின் வழிநடத்தலில் 50 மாவோயிஸ்டுகள் ஒன்றுகூட இருக்கிறார்கள் என்று கிடைத்த தகவலையடுத்து ஒடிசா, ஆந்திரா கூட்டு அதிரடிப்படை அந்த பகுதியை சுற்றி வளைத்து தாக்கியது. இத்தாக்குதலில் 24 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். சில நிமிடங்களில் நடந்து முடிந்த இந்த ஆபரேஷனில் சில மாவோயிஸ்டுகள் மட்டும் தப்பிச் சென்றனர்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

செவ்வாய் 25 அக் 2016