மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 அக் 2016

விருதுநகர் பட்டாசு கடைகளில் அதிரடி சோதனை!

விருதுநகர்  பட்டாசு கடைகளில் அதிரடி சோதனை!

தீபாவளி கொண்டாட இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தின் அனைத்து பட்டாசு கடைகள், குடோன்களில் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக, சிவகாசியில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் ஒன்பது பேர் பலையானதை அடுத்து தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு கடைகளில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதில் விதிமுறை மீறல் உள்ள 35 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது, மேலும் 10 கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர்.

தீபாவளி பட்டாசு விற்பனைக்காக மாவட்ட நிர்வாக அனுமதியுடன் விருதுநகர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், திருத்தங்கல், காரியாபட்டி முதலான பகுதிகளில் ஏராளமான பட்டாசு கடைகள் உள்ளன. இவற்றில் விதிமீறல் உள்ளதா என்பதை ஒரு வட்டாட்சியர் தலைமையில் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீஸார் கொண்ட குழுவினர் அக்டோபர் 15ஆம் தேதி முதல் ஆய்வு செய்து வருகின்றனர். அதில், 73 கடைகள் ஆய்வு செய்யப்பட்டதில் 20 கடைகளுக்கு விதிமுறை மீறல் காரணமாக உரிமத்தை ஏன் ரத்து செய்ய கூடாது என நோட்டீஸ் வழங்கியுள்ளனர். மேலும், இரண்டு கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

செவ்வாய் 25 அக் 2016