மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 அக் 2016

ஷாருக் கானை மறுசுழற்சி செய்ய முடியுமா?

ஷாருக் கானை மறுசுழற்சி செய்ய முடியுமா?

‘இங்லிஷ் விங்லிஷ்’ பட இயக்குநர் கௌரி ஷிண்டே புதிதாக இயக்கியிருக்கும் படம், டியர் ஷிந்தகி. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் மற்றும் அலியா பட், முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இதன் புதிய டீஸர் வெளியாகி பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஷாருக் கான் தன்னை ஜகாங்கிர் கான் என அறிமுகம் செய்வதாகத் தொடங்குகிறது இந்த டீஸர். இந்த டீஸரில் நீங்கள் சோகமான தருணத்தையே காண முடியாது. டீஸர் முழுக்க புன்னகைபூத்த முகங்களே வலம் வருகின்றன. டீஸரின் முடிவில் இரண்டு குழந்தைகளுடன் அமர்ந்து சைக்கிளை ரிப்பேர் செய்யும் ஷாருக் கான், இதை சரிசெய்ய முடியவில்லை என்றால் ரீ-சைக்கிள் [மறுசுழற்சி] செய்துவிடுவேன் என்று கூறுகிறார். அதைக் கேட்டு அலியா பட் சிரித்துக்கொண்டு சைக்கிளை ரீ-சைக்கிள் செய்வீர்களா? என கோர்வையாகப் பேசுகிறார். அதைக் கேட்ட குழந்தைகள் முகம் சுழிக்கிறார்கள், இதைப் பார்த்த ஷாருக் கான், நல்ல ஜோக்காக சொன்னால் நன்றாக இருக்கும் எனக் கூறி குழந்தைகளோடு சேர்ந்து சிரிக்கிறார். இதோடு டீஸர் காட்சிகள் முடிவடைகின்றன. அதன்பிறகு, அலியா பட்-இன் குரல் மட்டும் கேட்கிறது. ஒருவேளை, மனிதர்களை சரிசெய்ய முடியாமல் போனால் அவர்களையும் மறுசுழற்சி செய்துவிடுவீர்களா? என்ற கேள்வியோடு டீஸர் முடிவடைகிறது. ஷாருக் கானுக்கு தில்வாலே திரைப்படத்துக்குப் பிறகு சிறந்ததொரு கேரக்டர் கிடைத்திருக்கிறது எனலாம். எனவே மனிதர்களுக்கு மட்டுமல்ல, ஷாருக்குக்கும் இது ஒரு மறுசுழற்சியாக இருக்குமா? என்பது இயக்குனர் ஜௌரி ஷிண்டேவிடம் தான் இருக்கிறது. கௌரி ஷிண்டே தனது ‘இங்லிஷ் விங்லிஷ்’ திரைப்படத்துக்காக 8 விருதுகளைப் பெற்றிருக்கிறார். ‘டியர் ஷிந்தகி’ அவரது இரண்டாவது படம், இந்தப் படமும் பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம், வருகிற நவம்பர் 25ஆம் தேதி வெளியாகிறது. இதோ இதன் புதிய டீஸருக்கான லிங்க்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

செவ்வாய் 25 அக் 2016