மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 அக் 2016

ஃபேஸ்புக்கை வாங்க முயன்ற மைக்ரோசாஃப்ட்!

ஃபேஸ்புக்கை வாங்க முயன்ற மைக்ரோசாஃப்ட்!

சமூக வலைதளமான ஃபேஸ்புக்கின் நிறுவனர்களில் ஒருவரான மார்க் ஜூகர்பர்க், தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக ஃபோர்ப்ஸ் நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்திருந்தது.

மார்க் ஜூகர்பர்க், தனது கல்லூரி நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதற்காக இணையதளம் ஒன்றைத் தொடங்கினார். அதுதான் ஃபேஸ்புக். கடந்த 2004ஆம் ஆண்டு ஃபேஸ்புக் இணையதளத்தை தொடங்கிய மார்க், ஆரம்பகட்டத்தில் தனது கல்லூரி நண்பர்கள் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி வழங்கினார். பின்னர், அனைவரும் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கி, அடுத்த சில ஆண்டுகளில் உலகளவில் பல கோடி மக்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்தத் தொடங்கினர். தற்போதைய நிலையில், உலகளவில் 1.6 பில்லியன் பயன்பாட்டாளர்களைக் கொண்டுள்ள ஃபேஸ்புக்கின் மதிப்பு 374 பில்லியன் டாலராகும்.

ஒரு சிறிய துரும்பில் இருந்து இன்று மிகப்பெரிய சக்தியாக ஃபேஸ்புக்கை மாற்றிய இவரது உழைப்பும், சிந்தனைகளும் சிறப்பு வாய்ந்தது. ஆரம்ப காலகட்டத்தில் ஃபேஸ்புக் நிறுவனத்தை வாங்க கூகுள் போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் முயற்சித்தன. ஆனால் அவர்களின் அனைத்து முயற்சியையும் மார்க் அன்று மறுத்துவிட்டார்.

சமீபத்தில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ. ஸ்டீவ் பால்மர் தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியொன்றில், தான் ஃபேஸ்புக் நிறுவனத்தை 24 பில்லியன் டாலருக்கு வாங்க மார்க் ஜூகர்பெர்க்கை அணுகியதாகவும் ஆனால், அதற்கு அவர் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார். ஸ்டீவ் பால்மர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ.வாக கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2014 வரை பணியாற்றினார். இவர், தனது பதவிக் காலத்தில் ஃபேஸ்புக் நிறுவனத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஒரு அங்கமாக மாற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

செவ்வாய் 25 அக் 2016