மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 அக் 2016

'தல'யைப் பிரித்த மருத்துவர்கள்!

'தல'யைப் பிரித்த மருத்துவர்கள்!

தலை ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை 16 மணி நேரம் அறுவை சிகிச்சைக்குப் பின் போராடி வெற்றிகரமாக பிரித்தெடுத்தனர்.

அமெரிக்காவில், நியூயார்க் நகரைச் சேர்ந்த கிறிஸ்டியன் மேக்டொனால்டு, நிகோல் தம்பதியர்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தலை ஒட்டிய நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. அவர்களுக்கு ஜடோன், அணியாஸ் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இந்தக் குழந்தைகளின் தலை நேருக்கு நேராக ஒட்டிப் பிறந்ததால் இயல்பான குழந்தைகள்போல் தவழ்ந்து விளையாட முடியாமல் சிரமத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில், குழந்தைகளை தனித்தனியாக பிரித்தெடுக்க முடிவு செய்து நியூயார்க் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையை இரட்டையர்களின் பெற்றோர் அணுகினர். இதையடுத்து, மண்டை ஓடு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜேம்ஸ் குட்ரிச், ஓராண்டுக்குப் பிறகு இதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் எனக் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து குழந்தைகளுக்கு 13 மாதங்கள் ஆன நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) டாக்டர் ஜேம்ஸ் குட்ரிச் தலைமையிலான மருத்துவக் குழுவினர் 16 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின் இரட்டையர்களை தனித்தனியாக பிரித்தெடுத்துள்ளனர்.

பொதுவாக 5௦ மணிநேரம் நடக்கக்கூடிய இதுபோன்ற அறுவை சிகிச்சையை டாக்டர் ஜேம்ஸ் குட்ரிச் நவீன அறுவை சிகிச்சை முறைகள் மூலம் 16 மணிநேரத்தில் இருவரையும் தனித்தனியாக பிரித்தெடுத்துள்ளார். இந்த அறுவை சிகிச்சை, மூன்று கட்டங்களாக நடந்துள்ளது என குழந்தைகளின் பெற்றோர் கூறியுள்ளனர். தற்போது, தங்களின் குழந்தைகளை காண்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனக்கூறி மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி   மையத்தில்  பணி!

சிறப்புக் கட்டுரை: வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது? ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: வாழ்வில்  ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது?

சனி 15 அக் 2016