ஒடிஷா மாநில அமைச்சரவை மாற்றியமைக்கப்படுவதால் 10 அமைச்சர்கள், சபாநாயகர் ஆகியோர் பதவி விலகினர்.
ஒடிஷாவின் நிதியமைச்சர் பிரதிப் அமத், சிறு தொழில் அமைச்சர் ஜோகேந்திர பகேரா, உணவுத்துறை அமைச்சர் சஞ்சய் டஸ்பர்மா, சட்ட அமைச்சர் அருண் சஹு, உயர்கல்வி அமைச்சர் பிரதீப் பனிக்ரஹி, கல்வித்துறை அமைச்சர் டெபி பிரசாத் மிஷ்ரா, வீட்டுவசதித்துறை அமைச்சர் புஷ்பேந்திர சிங் டியோ, விளையாட்டு துறை அமைச்சர் சுதம் மார்ண்டி, மின்சக்தி துறை அமைச்சர் பிரணாப் பிரகாஷ் தாஸ், தாழ்த்தப்பட்டோர் முன்னேற்ற அமைச்சர் லால் பிஹாரி கிம்ரிகா ஆகியோர் மே 6-ஆம் தேதி பதவி விலகினார்கள். சபாநாயகர் நிரஞ்சன் புஜாரி மே 5-ஆம் தேதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்தார். இவர் புதிய அமைச்சரவையில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் பேசுகையில், “கட்சிக்காக தாமாக முன்வந்து தன் பதவிகளை இராஜினாமா செய்த அமைச்சர்கள் அனைவருக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். கட்சியில் உள்ள அனைவரும் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள். இதன்மூலம் கட்சியில் இருக்கும் அனைவரும் மாநிலத்தின் முன்னேற்றத்துக்காக உழைக்க முடியும்” என அவர் கூறினார்.�,