ஈவினிங் டீக்கடையில மழைக்கு இதமா அந்த லெமன் டீய ரசிச்சு குடிச்சுகிட்டு இருந்தப்போ ‘அடப்பாவிங்களா..’ன்னு ஃபோன பாத்திட்டே ஃப்ரெண்டு ஒருத்தன் உணர்ச்சி வசப்பட்டுக் கத்தினான். என்னடா விஷயம்னு கேட்டா ‘பாருடா குமாரு…அயோத்தில மாட்டுக்கு குளிரக் கூடாதுன்னு ஸ்வெட்டர் தச்சு போடப்போறாங்களாம். கூடவே குளிர் காய நெருப்பும் மூட்டப் போறாங்களாம்’ன்னு கண்ண உருட்டிகிட்டே சொல்றான். ‘அட இதில என்ன தப்பு? இதுக்கு கூட நாம தான் முன்னோடி தெரியுமா?’ன்னு பக்கத்தில இன்னொருத்தர் சொல்றாரு. எப்படீன்னு கேட்டா, ‘குளிர்ல நடுங்கின மயிலுக்கு போர்வைய குடுத்து அயோத்தி அரசுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததே நம்ம கடையேழு வள்ளல்ல ஒருதரான பேகன் தானே’ன்னு பெருமையா சொல்றாரு. ‘மாட்டுக்கும், மயிலுக்கும் போர்வைய குடுக்குறாய்ங்களே..பாராட்டணும் தான்பா..அப்படியே எங்க வீட்டுக்கும் ஒரு கூரைய போட்டுத் தர சொல்லுங்க’ன்னு சிரிச்சிட்டே ஒரு தாத்தா சீரியசா சொல்லிட்டு போனாரு. நீங்க மழைல நனையாம அப்டேட்ட படிங்க.
**சரண்யா**
முயற்சிக்கு எல்லை இருக்க கூடாது முன்னேறும் வரை முயற்சியை இழக்கக் கூடாது!!
**பழைய சோறு**
காந்தி தாத்தா
எருக்கங்காய் வெடிப்பில்
இன்னமும்
கிராமத்து மூலைகளில்
பறந்துகொண்டு
தான் இருக்கிறார்
ஆனால் பிடித்து
விளையாடத்தான்
எந்த குழந்தையும் இல்லை..!
**அபிவீரன்**
தமிழகத்தில் விரைவில் பாமக ஆட்சிக்கு வரும். அதற்கு என்னிடம் ஒரு மந்திரம் இருக்கிறது – அன்புமணி
அண்டாக கசம் அபுகா ஹுக்கும் திறந்திடு ஸுட்கேஸ்…
**சாயினா**
Gentleman movie~ களவாண்ட காச வச்சே hero college கட்டுறாரு… government மேல தான் தப்பு
Shivaji movie~ நேர்மையா சம்பாதிச்ச காச வச்சு college கட்ட முடில…அப்பயும் government மேல தான் தப்பு
சங்கர் மாம்ஸ்
**பிரதாப் ஜெகநாதன்**
விலை கொடுத்து வாங்கிட்டு வந்த வீரத்தமிழன் அவார்ட இப்படி சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களேடா..! இரக்கம் இல்லையா உங்களுக்கு.?
???????????? pic.twitter.com/0yWDwJPe9r
— தமிழ் பொழுதுபோக்கு 2.0 ???????? (@vaangasirikalam) November 24, 2019
**Vanitha**
நம்ம வீட்ல 24 மணி நேரமும் டி.வி ஓடிட்டே இருந்தாலும் கண்டுக்காத நாமதான்,
சலூன்ல வாயைப் பிளந்துகொண்டு பார்த்துட்டு உட்கார்ந்திருக்கோம்
**ச ப் பா ணி**
இருக்கிறவன் வீட்ல சி.சி.டி.வி இருக்கும்;
இல்லாதவன் வீட்ல நாய் இருக்கும்
செமஸ்டர்… pic.twitter.com/tp80FSEzwb
— Jesika Ruth (@Ruthjesi) November 25, 2019
**ச ப் பா ணி**
சனிப்பெயர்ச்சிக்கு வழிபட வேண்டிய தெய்வங்கள் எல்லாம்
கடவுளின் ஃபேக் ஐடிகளே!
**கனகாம்பரி**
அடுத்தவங்கமேல நம்பிக்கை வைக்குற நம்ம மனசுதான் முதல் நம்பிக்கைதுரோகி..
**திவாகரன் **
காகிதக்கப்பல் ஓட
பொருத்தமாய் அமையாத
நகரத்து வீதிகள்
குழந்தைகளால் சபிக்கப்பட்டவை!
**செந்திலின்_கிறுக்கல்கள்**
ராமு: உன்னை யாராவது ஆம்பளையானு கேட்டா என்ன பண்ணுவா…?!
சோமு : போய் தியானம் பண்ணுவேன்….?!
**amudu**
இப்பொழுது, அம்மாக்களை விட, அம்மாக்களின் மொபைல்களையே அதிகம் தேடுகின்றனர் குழந்தைகள்.
**முகமூடி**
தவிர்க்க முடியாமல் சில இழப்புகள்..!!
பல வெளிப்படுத்த முடியாமல்
சில உண்மைகள்..!!
நம்ப முடியாமல் சில துன்பங்கள்..!!
அனுபவிக்க முடியாமல் சில
சந்தோஷங்கள்..!!
இவைகள் நிறைந்தது தான்
வாழ்க்கை..!!
**நெல்லை அண்ணாச்சி**
அதிமுகவில் வெற்றிடம்
இல்லை ;
வெற்றி தான் இருக்கிறது
…ஓபிஎஸ் பேச்சு
எதுக்கும்…
ஆடிட்டர் கிட்ட
கன்பர்ம்
பண்ணிக்கோக்ங்க..bro..!!
**இயந்திர இதயம்**
“முயற்சி”யையும்,”பயிற்சி”யையும் இணைத்து செயல்பட்டால் மட்டுமே உனக்கு வளர்ச்சி
**நல்ல நண்பன் **
அருவியாய் அன்பைக் கொட்டத் தெரிந்தவர்க்கு வார்த்தைகளை
அடக்கத் தெரிந்தாலே போதும் பல
வலிகளை தவிர்க்கலாம்..
**M.R.K**
ஆறுதலுக்கு மரத்தில் அமரும்
பறவைகள் தன் மீது எச்சமிட்டாலும் ஒரு போதும் பறவைகளை மரங்கள் காயப்படுத்துவது இல்லை..!!
-லாக் ஆஃப்
�,”