<மோடியின் பகடி: அபிஜித்

public

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அக்டோபர் 14 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வரும் பொருளாதார அறிஞரான அபிஜித் பானர்ஜி இந்த விருதுப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது இந்தியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் அபிஜித் பானர்ஜி, அமெரிக்காவில் வசிக்கும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அபிஜித்தின் மனைவியும் பொருளாதார அறிஞருமான எஸ்தர் டூப்ளோ, அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு பொருளாதார அறிஞர் மைக்கேல் கிரிமர் ஆகிய 3 பேருக்கும் இந்த ஆண்டுக்கான பொருளாதார பிரிவுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

பொருளாதார அறிஞரான அபிஜித்தை, நோபல் பரிசு அறிவிப்புக்குப் பின் செய்தியாளர்களை சந்திக்கும் போதெல்லாம், இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார சிக்கல்கள் குறித்து கேள்வி எழுப்புவதுண்டு. அதற்கு பதிலளிக்கும் அபிஜித்தின் கருத்துக்கள் சர்ச்சையாகி வருகின்றன. ஏற்கெனவே பொருளாதார மந்தநிலை குறித்த விமர்சனங்கள், விவாதங்கள் அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்திவந்த நிலையில் அபிஜித் பானர்ஜியின் கருத்துக்கள் விவாதமாகி வருகின்றன.

இந்நிலையில், இன்று (அக்டோபர் 22) டெல்லியில் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்து பொருளாதார நிலவரம் குறித்து அபிஜித் பானர்ஜி விவாதித்தார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், அபிஜித் பானர்ஜியுடனான சந்திப்பு வெகு சிறப்பாக அமைந்தது. இந்தச் சந்திப்பின் வாயிலாக சாமானியர்களின் அதிகார மேம்பாட்டின் மீது அபிஜித் கொண்டுள்ள ஆர்வம் தெளிவாக வெளிப்பட்டது. இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் விரிவாக ஆலோசித்தோம். அபிஜித்தின் சாதனைகளைக் கண்டு இந்தியா பெருமிதம் கொள்கிறது. அவருடைய எதிர்காலப் பணிகள் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த சந்திப்பு குறித்த செய்தியாளர்களை சந்திப்பு நடந்தது. அப்போது நிருபர் ஒருவர் இந்தியப் பொருளாதார நிலை தொடர்பாக அபிஜித் இதற்கு முன்பு சொன்ன கருத்து குறித்து கேள்வி எழுப்பினார். அந்தக் கேள்வியை உடனடியாக மறுத்த அபிஜித் பானர்ஜி, “பிரதமர் என்னுடனான ஆலோசனையை ஒரு பகடியைச் சொல்லித்தான் ஆரம்பித்தார். ஊடகங்கள் எப்படி மோடி எதிர்ப்பு கருத்துகளை நான் கூறும் வகையில் வலைவிரிக்கின்றன எனக் கூறினார். அவர் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார், உங்கள் அனைவரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். நீங்கள் என்ன செய்ய முயற்சிக்கிறீர்கள் என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது. அதனால், நான் இதுதொடர்பான எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லப்போவதில்லை.பிரதமர் மோடியை சந்தித்தது எனக்குக் கிடைத்த சிறப்பாகப் பார்க்கிறேன். அவர் இந்தியா மீது கொண்டுள்ள பார்வை தனித்துவம் வாய்ந்தது” எனக்கூறினார்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *