குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ‘ரயில்களையும், பேருந்துகளையும் தீயிட்டுக் கொளுத்த உங்களுக்கு யார் அதிகாரம் அளித்தார்கள்’ என்று நடிகை கங்கனா ரணாவத் கேள்வி எழுப்பியுள்ளார்.
கங்கனா ரணாவத் நடிப்பில் ‘பங்கா’என்னும் இந்தி திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நேற்று(டிசம்பர் 23) மும்பையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு பேசிய அவரிடம் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு மாணவர்கள் நடத்திவரும் போராட்டத்தைக் கடுமையாக விமர்சித்து அவர் பதிலளித்துள்ளார். “மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடும்போது அதனை வன்முறையாக மாற்றாமல் இருப்பது மிகவும் முக்கியமானது. நமது நாட்டின் மக்கள் தொகையில் வெறும் 3 அல்லது 4 சதவீதம் பேர் மட்டுமே வரி செலுத்தி வருகிறார்கள். மற்றவர்கள் அனைவரும் அவர்களை நம்பித் தான் வாழ்ந்து வருகிறார்கள். அவ்வாறு இருக்கும் போது பேருந்துகளையும், ரயில்களையும் தீயிட்டுக் கொளுத்தவும், கலவரத்தை ஏற்படுத்தவும் யார் உங்களுக்கு அதிகாரம் அளித்தார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
This is what Kangana has to say about on going strikes and #CAA
???? pic.twitter.com/VuBoRKdWMH
— Anand Kalra???? (@anandkalra69) December 23, 2019
மேலும், ‘சுதந்திரத்திற்கு முன்பு போன்று நாம் அடிமைப்பட்டு கிடந்த காலம் அல்ல இது. மக்களாட்சி நடைபெற்று வரும் இந்த ஜனநாயகத்தில் வன்முறையை ஏற்க முடியாது. நமது நாட்டிற்கான தலைவரை நாம் தான் தேர்ந்தெடுக்கிறோம். நமது தலைவர்கள் ஜப்பானில் இருந்தும் சீனாவில் இருந்தும் வந்துவிடவில்லை’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று வெளியிடப்பட்ட பங்கா திரைப்படத்தின் ட்ரெயிலர் 26 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங்கில் உள்ளது. கபடி விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம், விளையாட்டை ஒதுக்கி வைத்துவிட்டு குடும்ப வாழ்க்கைக்குள் கடந்த கபடி வீராங்கனையின் கதையைக் கூறுவதாக உள்ளது.
�,”