^ஒரே நேரத்தில் 18 யானைகள் உயிரிழப்பு!

public

fஅசாம் மாநிலத்தில் நேற்று (மே 13) ஒரே நேரத்தில் 18 யானைகள் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால், யானைகள் இறந்ததற்கான உண்மையான காரணம் குறித்து வனத்துறையினர் இதுவரை தெளிவுப்படுத்தவில்லை.

அசாம் மாநிலம் நாகான் மாவட்டத்தில் பர்ஹாம்பூர் காவல் நிலையத்தின் கீழ் உள்ள பமுனி வனப்பகுதியில் 18 காட்டு யானைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. அந்தப் பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்படி வனத்துறை ஊழியர்கள், அதிகாரிகள், கால்நடைத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

மலைகள் நிறைந்த வனப்பகுதி என்பதால் மலையடிவாரத்தின் கீழ் 4 யானைகளும், மலையின் மேல் பகுதியில் 14 யானைகளும் இறந்து கிடந்தன. யானைகள் உயிரிழப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. ஆனால், மின்னல் தாக்கியதால் யானைகள் இறந்திருக்கலாம் என்று வனத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்த யானைகளுக்கு இன்று (மே 14) பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதன் பிறகே யானைகள் இறந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும்.

இது தொடர்பாக யானைகள் நல ஆராய்ச்சியாளர் விஜயானந்த சவுத்ரி கூறுகையில், “பிரேத பரிசோதனை அறிக்கை யானைகளின் மரணத்துக்கான காரணத்தை வெளிப்படுத்தும். இருப்பினும் மின்னல் தாக்கி யானைகள் இறந்ததாகத் தெரியவில்லை. யானைகளின் மரணத்துக்கு விஷமும் காரணமாக இருக்கலாம்” என்று கூறியுள்ளார்.

** ராஜ்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.