ஊட்டச்சத்து குறைபாட்டால் 17 லட்சம் பேர் உயிரிழப்பு!

Published On:

| By admin

உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் 70 சதவீதம் பேருக்கு ஆரோக்கியமான உணவுகள் கிடைப்பதில்லை என்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட சீனா நாட்டுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பரப்பளவு மிகக் குறைவு. இருப்பினும் ஆண்டுக்கு போதிய ஊட்டச்சத்து உள்ள உணவுகள் கிடைக்காமல் 17 லட்சம் பேர் இந்தியாவில் உயிரிழக்கின்றனர் என்று இந்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் ஆரோக்கியத்திற்காக உண்ண வேண்டிய உணவு தற்பொழுது வெறும் சுவைக்காக உண்ணப்பட்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தற்பொழுது ஆரோக்கிய உணவுகளை காட்டிலும் ஜங்க் ஃபுட் மற்றும் குளிர்பானங்கள் தான் அதிக அளவில் விற்பனையாகின்றன. இந்தியாவிலுள்ள பெருநகரங்களிலும் பெரும்பாலானோர் ஜங்க் உணவுகளையே விரும்புகின்றனர். இதனால் பல பேருக்கு உணவிலிருந்து கிடைக்கும் போதிய ஊட்டச்சத்து கிடைப்பதில்லை.

இதுகுறித்து இந்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் போதிய ஊட்டச்சத்து உணவு கிடைக்காமல் 17 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர். இந்தியாவில் 20 வயதிற்கு மேற்பட்டவர்கள் 200 கிராம் பழங்களை உட்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் 20 மேற்பட்ட ஒருவர் சராசரியாக 35.8 கிராம் பழங்களை மட்டுமே எடுத்துக் கொள்கிறார் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேபோல நாளொன்றுக்கு 300 கிராம் காய்கறிகளை உட்கொள்ள வேண்டிய நிலையில், 168.7 கிராம் காய்கறிகள் மட்டுமே உட்கொள்ளப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment