[17 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த ஜோடி!

public

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடிப்பதோடு திரைக்கதை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்கிறார்.

நம்பி நாராயணன் மேல் எழுந்த குற்றச்சாட்டும், சிறை வாழ்க்கையும், பின்னர் குற்றமற்றவர் என்று நிரூபணமானதும் ஒரு கமர்ஷியல் திரைக்கதையிலும் காண முடியாத வலியான திருப்பங்கள். இந்த அனுபவங்களை நம்பி நாராயணன் புத்தகமாக எழுதியுள்ள போதும் திரைப்படமாக உருவாக்கும்போது ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான மக்களை சென்றடைய முடியும். நம்பி நாராயணனோடு விவாதித்து திரைக்கதை எழுதியுள்ளார் மாதவன்.

இந்தப் படத்தை அவருடன் இணைந்து ஆனந்த் மகாதேவன் இயக்குகிறார். மேலும் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் படக்குழுவுடன் இணைந்துள்ளார். இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

பாலசந்தர் இயக்கிய பார்த்தாலே பரவசம், மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களில் மாதவனும் சிம்ரனும் இணைந்து நடித்திருந்தனர். இந்த நிலையில் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தப் படத்தில் மீண்டும் இணையவுள்ளனர்.

ஜனவரி 14ஆம் தேதி மாதவனுக்கு நம்பி நாராயணன் கதாபாத்திரத்துக்கான மேக்கப் டெஸ்ட் நடைபெற்றது. இதை மாதவன் வீடியோவாக வெளியிட்டு உறுதிபடுத்தியிருந்தார்.

சாம் சி.எஸ் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சங்கீத் சத்யானந்தன் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *