பப்ஜி மதன்: 1,600 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!

public

பப்ஜி மதன் மீது 1,600 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

பப்ஜி விளையாட்டில் ஆபாசமாகப் பேசி யூடியூபில் வீடியோ பதிவேற்றம் செய்த பப்ஜி மதன் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அவரது மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததால், இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் நடந்து வருகிறது.

தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பப்ஜி மதன் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் சென்னை காவல் ஆணையர் பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா மீதான குற்றப்பத்திரிக்கையை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று தாக்கல் செய்தனர்.

32 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், 150க்கும் மேற்பட்டோர் புகார் அளித்த நிலையில் 32 பேர் மட்டுமே எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்ததாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் உதவி செய்வதாகக் கூறி 2,848 பேரிடம் 2 .89 கோடி ரூபாய் பண மோசடி செய்துள்ளதாகவும் மதன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பண மோசடி பிரிவின் கீழும் மதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் நீதிமன்ற உத்தரவின் பேரில் மதன் ஆபாசமாகப் பேசிய ஆடியோ சைபர் ஆய்வகத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது என்றும் அந்த ஆய்வு முடிந்தபின் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.