niki kalrani marriage image

Iதமிழக மீனவர்கள் 16 பேர் கைது!

public

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 16 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர்.

ராமேஸ்வரம்,மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து இருந்து சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் மீன்பிடிக்க நேற்று கடலுக்குள் சென்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே ஒரு விசைப்படகில் மீன்பிடித்து கொண்டிருந்த நான்கு மீனவர்கள் மற்றும் இரணைத்தீவு அருகே மற்றொரு விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 12 மீனவர்கள் என மொத்தம் 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. தற்போது இவர்கள் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 24ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகை, காரைக்கால் மீனவர்கள் 22 பேரை நேற்று இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்த நிலையில், இன்று 16 மீனவர்களை கைது செய்த சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.