தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 16 பேரைப் பணியிட மாற்றம் செய்து, தமிழக அரசு நேற்று (ஆகஸ்ட் 21) அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஏடிஜிபி ஆக சைலேஷ்குமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை வடக்கு மண்டல ஐஜி ஸ்ரீதர், குற்றப்பிரிவு சிஐடி ஐஜி ஆக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. குற்ற ஆவணப் பிரிவு ஐஜி ஆக சாரங்கன் நியமிக்கப்பட்டுள்ளார். ஐஜி மீது பாலியல் புகார் அளித்த பெண் எஸ்பி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகரக் காவல் கூடுதல் ஆணையர்கள் இரண்டு பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை காவல் நிர்வாகப் பிரிவு ஐஜி ஆக எச்.எம்.ஜெயராமன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை காவல் துறை அமலாக்கப் பிரிவு ஐஜி ஆக சுமித் சரண் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சிறப்புக் காவல்படை மைய கமான்டண்ட் ஆக வெண்மதி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு காவல் போக்குவரத்துக் கழக ஏடிஜிபியாக அருணாசலம் நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் குற்றப்பிரிவு துணை ஆணையர் தங்கத்துரை, சட்டம், ஒழுங்குக்கு மாற்றப்பட்டுள்ளார். சேலம் சட்டம் ஒழுங்கு ஆணையர் சுப்புலட்சுமி சென்னைக்கு மாற்றப்பட்டார். சென்னை வடக்கு மண்டல ஐஜி ஆக நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பெருநகர சட்டம் ஒழுங்கு (தெற்கு) கூடுதல் ஆணையர் மகேஷ்குமார் ஆகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பெருநகர சட்டம்-ஒழுங்கு (வடக்கு) கூடுதல் ஆணையராக ஆர்.தினகரனை தமிழக அரசு நியமித்துள்ளது. ஊழல் ஒழிப்புத் துறை எஸ்.பி.ஜெயலட்சுமி, வார்த்தக குற்ற விசாரணைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். மதுவிலக்கு குற்ற மத்திய புலனாய்வுப் பிரிவு எஸ்பி ஆக வந்திதா பாண்டேவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சேலம் நகர குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையராக சியாமளாதேவி நியமிக்கப்பட்டுள்ளார்.�,