தமிழ்நாட்டில் 13 இடங்களில் புதிய பேருந்து நிலையங்களை அமைக்க அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கார், இருசக்கர வாகனம் உள்ளிட்ட தனிநபர் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது போன்று, பொதுப் போக்குவரத்தில் பேருந்துகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்றாற்போல், பேருந்துகளில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. அதனால், பேருந்து நிலையங்களின் தேவையும் அவசியமாகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ரூ.424 கோடியில் 13 இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்தான அரசாணையில், தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.424 கோடியில் சங்கரன்கோவில், திருமங்கலம், மன்னார்குடி, மயிலாடுதுறை, கடலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திண்டிவனம், திருத்தணி, திருவண்ணாமலை, ஈரோடு, கரூர், நாமக்கல் ஆகிய 13 இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.
தமிழ்நாடு உட்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனம், உள்ளாட்சி அமைப்புகளின் நிதியுதவியுடன் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படுகின்றன. பேருந்து நிலையங்கள் அமைக்கும் பணி விரைவில் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,”