ஆல்கஹால்: விமான ஊழியர்கள் 13 பேர் பணியிடை நீக்கம்!

Published On:

| By Balaji

ஆல்கஹால் பரிசோதனையில் சிக்கிய விமான நிறுவன ஊழியர்கள் 13 பேர் மூன்று மாதங்களுக்குப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

விமானப் போக்குவரத்து ஜெனரல் இயக்குநரகம் கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி, விமானப் பராமரிப்பு மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு போன்றவற்றை கையாளும் ஊழியர்கள் உட்பட அனைத்து விமான நிலையங்களில் பணியாற்றும் விமானப் பிரிவு ஊழியர்களுக்கு ஆல்கஹால் பரிசோதனை நடத்த விதிகளைப் பிறப்பித்து உத்தரவிட்டது.

இதன்படி இதுவரை நடந்த பரிசோதனையில் இண்டிகோ விமான நிலையத்தின் ஏழு ஊழியர்கள், கோ ஏர் மற்றும் ஸ்பைஸ் ஜெட் ஆகிய விமான நிலையத்தின் விமானப் பிரிவைச் சேர்ந்த தலா ஓர் ஊழியர் உள்பட 13 ஊழியர்கள் மதுபானம் அருந்தியிருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவர்களை மூன்று மாதங்களுக்குப் பணியிடை நீக்கம் செய்து விமானப் போக்குவரத்து ஜெனரல் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share