,13 மீனவர்கள் கைது!

Published On:

| By Balaji

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டையைச் சேர்ந்த 13 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 9 பேர் 2 படகுகளிலும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த 4 பேரும் மீன் பிடிக்கக் கடலுக்குள் சென்றுள்ளனர். இந்நிலையில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருக்கும்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினர் அவர்களை நேற்று (நவம்பர் 1) இரவு கைது செய்து அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகவும், இரட்டை மடிவலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்ததாகவும் கூறி அவர்களைக் கைது செய்துள்ளதாக இலங்கை பாதுகாப்புத் துறை வாட்டரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த அக்டோபர் 26ஆம் தேதி 5 மீனவர்களும், அக்டோபர் 20ஆம் தேதி பாம்பன் பகுதியைச் சேர்ந்த 7 மீனவர்களும் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கைக் கடற்படையினர் புதுக்கோட்டை மீனவர்களைக் கைது செய்வது தொடர்கதையாகிவிட்டது என்று வேதனையுடன் கூறிய மீனவ மக்கள், இதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel