12 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை? அரசு கொறடா ஆலோசனை!

public

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களித்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு கொறடா தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார் என்று தகவல் வந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி தனக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதையடுத்து ஆளுநர் எடப்பாடிக்கு அழைப்பு விடுக்க, அவர் ஆட்சியமைத்தார். அப்போது ஆளுநர் 15 நாள் அவகாசம் கொடுத்து, அதற்குள் சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்து தன் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கூறியிருந்தார் .

இதையடுத்து சட்டமன்றம் கூடும் முன் அரசு கொறடா ராஜேந்திரன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், “அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு அரசிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தார்.

சட்டசபை கூட்டப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக 122 எம்எல்ஏக்கள் ஆதரவு அளிக்க, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் 11 பேர் எதிராக வாக்களித்தனர். எம்எல்ஏ. சரவணகுமார் வாக்களிக்காமல் ஊர் திரும்பிவிட்டார். இந்நிலையில் இவர்கள் 12 பேரும் அரசு கொறடா உத்தரவை மீறியதால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இவர்கள் எம்எல்ஏ பதவி பறிபோகும் என்று கூறப்பட்டது. அப்படி நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் இந்த 12 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த வேண்டும். அப்படி நடத்தினால் அது எதிர்கட்சிகளுக்கு சாதகமாகிவிடும். எனவே இந்த 12 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று கூறப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்கள் 11 பேர் (ஓபிஎஸ் அணி) மீது உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.

இந்நிலையில்தான் அரசு கொறடா தற்போது இந்த 12 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகிறார் என்கிறது அதிமுக வட்டாரம். இதற்காக மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் அவர்களிடம் அரசு கொறடா ராஜேந்திரன் ஆலோசனை நடத்தி வருகிறார் என்று தெரிகிறது. எனவே எந்த நேரத்திலும் இந்த 12 எம்எல்ஏக்கள் மீதும் நடவடிக்கை பாயலாம். இவர்களது எம்எல்ஏ பதவி பறிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *