108 ஆம்புலன்ஸ்: பராமரிப்பின்மையால் உயிரிழந்த நோயாளி!

public

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையிலிருந்து, தற்கொலை முயற்சியாக விஷம் குடித்து அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளியைத் தீவிர சிகிச்சைக்காகப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குப் பரிந்துரை செய்யப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் வென்டிலெட்டர் இல்லாத காரணத்தால், சுமார் 2 மணி நேரம் காலதாமதமாக தனியார் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட வேங்கடேசன் என்பவர் பரிதாபமாக இறந்தார்.

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கடந்த ஜுன் 12ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அவசர, அவசரமாக அழைத்து வந்துள்ளார்கள் அன்று மாலை 4.30 மணியளவில். அதன் பிறகு என்ன நடந்தது என்று நோயாளியின் உறவினர் கனகசபை கூறுகையில், கடலூர் அரசு மருத்துவமனையில் போதிய உயர் சிகிச்சை கொடுக்க முடியவில்லை என்பதால், ஜிப்மர் மருத்துவமனைக்குப் பரிந்துரை செய்தார்கள். உடனடியாக, 108 ஆம்புலன்ஸ் வரும்படி கேட்டோம்.

அதற்கு ஆம்புலன்ஸ் வாகனத்தினர், வென்டிலெட்டர் பழுதடைந்துள்ளது, அவசரமாக இருந்தால் தனியார் ஆம்புலன்-ஸில் கொண்டு போங்கள் என்றார்கள். நாங்கள் தனியார் ஆம்புலன்-ஸில் கேட்டபோது, அவர்கள் ரூ 8500 கொடுக்கும்படி கேட்டார்கள். ஆனால், எங்களிடம் அவ்வளவு பணம் கையில் இல்லை. நாங்கள் அதிகபட்சமாக 750 ரூபாய்தான் வைத்திருந்தோம். வேறு வழியில்லாமல் ஊரிலிருந்து உறவுக்காரர்களை வரவழைத்து ரூ. 8500 கொடுத்து தனியார் ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றோம் காலதாமதமாக.

டாக்டர்களும் ஏன் இவ்வளவு காலதாமதம் என்று சிகிச்சையைத் தொடங்கினர். ஆனால், நேற்று ஜூன் 13ஆம் தேதி அதிகாலையில் சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார் என்று ஆவேசமடைந்தார். அதையடுத்து, இதுகுறித்து, நாம் 108 மார்கெட்டிங் மேலாளர் பிரபுதாசை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கையில், உலகத்திலேயே ஆம்புலன்ஸ் சேவை செய்வதில் நமது தமிழக அரசுதான் முதலிடத்தில் உள்ளது, தமிழகத்தில் 855, 108 ஆம்புலன்ஸ் இயக்கப்படுகிறது, அதில் மாவட்டத்தில் ஒன்று அல்லது 2 வென்டிலெட்டர் பொருத்திய 108 ஆம்புலன்ஸ் வாகனம் மட்டுமே உள்ளது. வெண்டிலெட்டர் இல்லாதபட்சத்தில் AMBU BAG கருவி வைத்துள்ளோம், அதைப் பயன்படுத்தி அழைத்துப் போகலாம்.

அதேபோல் டீசலுக்கு அளவுகோலின்றி, எவ்வளவு தூரம் சென்றாலும் நோயாளியைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் அரசு நோக்கம். மேலும், 2 ½ லட்சம் கிலோமீட்டர் ஓடிய ஆம்புலன்ஸ்களை உடனடியாக மாற்றித் தருகிறது தமிழக அரசு. 855 ஆம்புலன்ஸில் சுமார் 350 ஆம்புலன்ஸ் புதியது, ஒரு ஆம்புலன்ஸ் மதிப்பு சுமார் ரூ13 லட்சம் செலவாகும். மேலும், வாகன பராமரிப்பு, டீசல் உள்பட அனைத்துச் செலவுகளையும் தமிழக அரசுதான் செய்து வருகிறது மக்கள் சேவையைக் கருதி.

108 சர்வீசில் குறைபாடுகள் என்றால் உடனே புகார் செய்யச் சொல்லுங்கள். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் யாரும் தனியார் ஆம்புலன்ஸ்க்கு பரிந்துரை செய்யக்கூடாது, அப்படிச்செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்திலேயே 108 ஆம்புலன்ஸ் சர்வீஸ் அதிகமாகப் பயன்படுத்தும் மாவட்டம் கடலூர்தான். மற்ற குறைகளைப்பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *