13,507 வேலைவாய்ப்புகள்: புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

public

தமிழகத்தில் 10,399 கோடி ரூபாய்க்கான முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, உலக பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை தொடர்ந்து மேம்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதிய முதலீடுகளை ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்நிலைக் குழு அமைத்தது, பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று (ஜூலை 20) தலைமைச் செயலகத்தில், 6 மாவட்டங்களில் 8 தொழில் நிறுவனங்கள் தங்கள் புதிய முதலீட்டு திட்டங்களை 10,399 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் துவங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இத்திட்டங்களின் மூலம், சுமார் 13,507 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், தலைமைச் செயலாளர் சண்முகம் தொழில்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று 8 புதிய தொழில் திட்டங்களை தமிழ்நாட்டில் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. தற்போது நிலவிவரும் சூழ்நிலையின் காரணமாக, இந்த 8 திட்டங்களில், 5 திட்டங்களுக்கு நேரடியாகவும், 3 திட்டங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டங்களின் விவரங்கள் பின் வருமாறு:-

1. காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் உள்ள இண்டோஸ்பேஸ் தொழிற் பூங்காவில், Vikram Solar நிறுவனம், 5,423 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 7,542 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Solar Cells & Modules உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். இதுவரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த Solar Cells மற்றும் Modules, இத்திட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட உள்ளன.

2. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில், 250 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 1,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், CGD Sathrai Pvt Limited நிறுவனத்தின், தொழிற்பூங்கா திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

3. கோயம்புத்தூர் மாவட்டத்தில், 200 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Aquasub நிறுவனத்தின் Ductile Iron Foundry திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

4. இராணிப்பேட்டை மாவட்டத்தில், 200 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், NDR Infrastructure நிறுவனம், 125 ஏக்கர் பரப்பளவில் அமைக்க உள்ள தொழிற் பூங்கா திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

5. விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் 36 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 465 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், GI Agro Tech நிறுவனத்தின் முந்திரி பதப்படுத்தும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

6. செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் – ஒரகடம் நெடுஞ்சாலையில், 4,000 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 2,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Hiranandani குழுமத்தை சேர்ந்த Yotta நிறுவனத்தின் தகவல் தரவு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

7. கோயம்புத்தூர் மாவட்டத்தில், 250 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ELGI Equipments நிறுவனத்தின் Air Compressors உற்பத்தி புரிந்துணர்வு ஒப்பந்தம்.

8. ஈரோடு மாவட்டம், சிப்காட் பெருந்துறை தொழிற்பூங்காவில், 40 கோடி ரூபாய் முதலீட்டில், JS Auto Cast நிறுவனத்தின் Foundry விரிவாக்கத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *