10 கோடி பாலோயர்கள்: விராட் கோலியின் புதிய சாதனை!

Published On:

| By Balaji

இன்ஸ்டாகிராமில் 10 கோடி ஃபாலோயர்களை கடந்த முதல் இந்தியர் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி படைத்துள்ளார்.

உலக அளவில் இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்தொடருபவர்களில் நான்காவது விளையாட்டு வீரராகவும் முதல் ஆசியராகவும் கோலி இடம்பிடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் 26.6 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக்கொண்ட விளையாட்டு வீரராக பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ முதல் இடத்தில் இருக்கிறார்.பார்சிலோனா கேப்டன் மெஸ்ஸி மற்றும் பிரேசிலின் நெய்மர் முறையே 18.6 கோடி, 14.7 கோடி பின்தொடர்பவர்களுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் தவிர, ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் போன்ற பிற சமூக ஊடகதளங்களிலும் கோலியை அதிக ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள். தற்போது வரை அவருக்கு ட்விட்டரில் 4.08 கோடி ஃபாலோயர்கள் உள்ளனர். அதே நேரத்தில் ஃபேஸ்புக்கில் 3.6 கோடிக்கும் அதிகமான லைக்குகள் உள்ளன.

Virat Kohli – the first cricket star to hit 100 million followers on Instagram ???? pic.twitter.com/HI1hTSbo8M

— ICC (@ICC) March 1, 2021

இதையொட்டி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கோலிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

**-ராஜ்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share