இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் கடந்த ஒரே நாளில் 10,000க்கும் அதிகமாகப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு இன்று பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில் மொத்த பாதிப்பு இந்தியாவில் மூன்று லட்சத்தை நெருங்கி இருக்கிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”ஒரே நாளில் 10 ஆயிரத்து 965 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 2.96 லட்சமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 394 பேர் உட்பட இதுவரை நாடு முழுவதும் 8,498 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 49சதவிகிதம், அதாவது 1,41,842 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
**மகாராஷ்டிரா**
மகாராஷ்டிராவில் புதிதாக 3,607 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு 97,648 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 152 பேர் உயிரிழந்துள்ளனர்.மும்பையில் மட்டும் 1500 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
**தமிழகம்**
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,875 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதால் இதுவரை மொத்தம் பாதிப்பு 38 ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ளது.
**டெல்லி**
இந்தியத் தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1877 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு 34 ஆயிரத்து 687 ஆக உள்ளது.
உலக அளவில் 75 லட்சம் பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிக பாதிப்பு உள்ள நாடுகளின் பட்டியலில் 11ஆவது இடத்திலிருந்து இந்தியா நான்காவது இடத்திற்கு நகர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
**-கவிபிரியா** �,