தினப் பெட்டகம் – 10 (31.12.2018)
ஆண்டு நிறைவின் தருணத்தில் கடந்துபோன ஆண்டை நினைவுகூர்வதும் புதிய உறுதிமொழிகளைக் கைக்கொள்வதும் வழக்கம். ஆண்டு நிறைவைப் பற்றிய சில சிறப்பம்சங்கள்:
1. ஒவ்வொரு ஆண்டும் 40 முதல் 50 சதவிகிதம் மக்கள் புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிட நினைக்கின்றனர். ஆனால், அதிகபட்சம் 5% பேர் மட்டுமே அதைச் சாதிக்கின்றனர்.
2. டிசம்பர் 31 அன்று இரவு 12 மணியைத் தொடும்போது நம் அன்பானவர்களுடன் இருப்பது அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது.
3. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31 இரவு, ஏறத்தாழ ஒரு மில்லியன் மக்கள் நியூ யார்க் டைம்ஸ் சதுக்கத்தில் (Times Square) கூடுகின்றனர். அங்கு நிகழும் மிகப் பிரபலமான Ball dropஐக் காணவே அவ்வளவு கூட்டம்.
4. அந்தப் பெரிய பந்து 60 வினாடிகளில் 142 அடிகள் விழுந்து, 12 மணிக்குப் புத்தாண்டைக் குறிக்கும் விதமாக நின்றுவிடும்.
5. டிசம்பர் மாதம்தான் வருடத்திலேயே மிகவும் குளிரான மாதம்!
6. டிசம்பர் என்ற சொல், ‘பத்து’ எனப் பொருள் தரக்கூடிய லத்தீன் வார்த்தையான “டிசம்” (Decem) என்ற சொல்லிலிருந்து வருகிறது.
7. 2018ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் விருது இந்தாண்டு வழங்கப்படவில்லை, 2019ஆம் ஆண்டில் சேர்த்து வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8. பார்வையற்றோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்திய அணி இந்த ஆண்டில் வென்றது.
9. இந்தியாவின் முதல் பெண்கள் கமாண்டோ படை இந்த ஆண்டு தில்லி காவல் துறையில் உருவாக்கப்பட்டது.
10. கடந்த நூறு ஆண்டுகளில் கண்டிராத அளவில் கடுமையான மழை, வெள்ளத்தைக் கேரள மாநிலம் இந்த ஆண்டு எதிர்கொண்டது.
காலம் அதிவேகமாக ஓடி மறைகிறது. ஒவ்வொரு ஆண்டும் நம்மைப் புதியவர்களாக மாற்றுகிறது. கழிந்ததை நினைத்து வருந்தாமல், வருபவற்றை மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளலாம். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
**- ஆஸிஃபா**
**முந்தைய பகுதி : [மகிழ்ச்சியூட்டும் பழம்!](https://minnambalam.com/k/2018/12/30/14)**�,